Vijay: "உங்க விஜய் இன்று புதுவைக்கு வராரு" என்ன பேச போகிறார்? 11 நிபந்தனைகள் விதித்த போலீஸ்!
புதுச்சேரி: புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி 11 நிபந்தனைகளை அந்த மாநில காவல் துறை விதித்துள்ளது.
30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில் 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் விஜய் வெளியிட்டிருந்தார்.
லாஸ்பேட்டை- சாமிநாதன்
காரைக்கால் தெற்கு- அசனா
நெட்டப்பாக்கம் (தனி)- பெரியசாமி
திருபுவனை (தனி)- சாய் சரவணன் குமார்
முத்தியால்பேட்டை- பிரகாஷ்குமார்
பாகூர்- தனவேலு
ராஜ்பவன்- சந்திரன்
உப்பளம்- சிவா
அரியாங்குப்பம்- குமரவேலு
மணவெளி- ராமு
வில்லியனூர்- ரமேஷ்
முதலியார்பேட்டை- மணிபாலன்
மண்ணடிப்பட்டு- பாரதிதாசன்
உருளையன்பேட்டை- மரிய பிரான்சிஸ்
மங்கலம்- சத்யா
காமராஜ் நகர்- சுமன்
நெல்லித்தோப்பு- விக்னேஸ்வரன்
காலாப்பட்டு- சசிக்குமார்
இந்திரா நகர்- முருகன்
கதிர்காமம்- ஜெயந்தி
ஊசுடு (தனி)- சரவண பாலா
தட்டாஞ்சாவடி- பன்னீர் செல்வம்
ஏம்பலம் (தனி)- தமிழ்ச் செல்வன்
நெடுங்காடு (தனி)- காமராஜ்
திருநள்ளாறு- ராஜா முகமது
காரைக்கால் வடக்கு- வெங்கடேஷ்
நிரவி - கணேஷ்
மாஹே- பிரிஜேஷ்
ஏனாம்- தோட்டாராஜு
ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் இவர்களை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி காலை 10 மணிக்கு தட்டாஞ்சாவடியிலும், 11 மணிக்கு கடலூர் சாலை மால் பகுதியிலும், பகல் 12 மணிக்கு தவளக்குப்பம் ஜங்ஷன் சாலையிலும் விஜய் பிரச்சாரம் செய்கிறார்.
23 இடங்களில் பிரச்சாரம் செய்ய காவல் துறைக்கு அனுமதி கேட்டு தவெகவினர் கடிதம் அனுப்பியிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு வரும் விஜய், கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு, வில்லியனூர் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த பிரச்சாரத்தில் 5000 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது, தமிழக ரசிகர்கள், தமிழக தொண்டர்கள் கலந்து கொள்ளக் கூடாது, புதுவையைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும்.
விஜய் பேசும் இடங்களில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. வாட்டர் பாட்டில், பிஸ்கட் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்து இருக்க வேண்டும். எங்கு அனுமதி வழங்கப்பட்டதோ, அங்கு மட்டும்தான் வேன் மேலே நின்று பேச வேண்டும். மற்ற இடங்களில் வேனின் மீது ஏறக்கூடாது.
ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் பிரச்சார வேனை பின் தொடரக்கூடாது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை செல்ல வேண்டும் என்பன போன்ற 11 நிபந்தனைகளை புதுவை காவல் துறை விதித்துள்ளது.
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா












Click it and Unblock the Notifications