Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மோடி இன்று நடத்தும் கூட்டம் தமிழக அரசியலின் கவனத்தை பெற்று வருகிறது.. பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பாஜக கோர் கமிட்டியுடன் பிரதமர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.. தேர்தல் வியூகங்களை வகுப்பதுடன், கூட்டணி தலைவர்களையும் இன்று பிரதமர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.. இன்றைய நிகழ்வில் பங்கேற்க கேரளா பிரச்சாரத்தில் இருந்து அவசரமாக சென்னை திரும்பி உள்ளார் அண்ணாமலை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்றும், இன்றும் அதாவது ஏப்ரல் 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்.

Modi Annamalai Chennai BJP Election 2026 Candidates List Core Committee Tamil Nadu Politics Operation Strategy 2026

சென்னையில் மோடி

புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்து, நேற்றிரவு சென்னை ஏர்போர்ட் வந்த பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். பிரதமர் மோடியை, தொழில், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்களாக உள்ள முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள்.. அப்போது மூத்த தலைவர் எச்.ராஜாவும் பிரதமரை சந்தித்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று பாஜக மத்திய கோர் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று, வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார்.

பாஜக வேட்பாளர்கள் லிஸ்ட்

குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடனான இடப் பகிர்வில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்து, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வது இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை கட்சி நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூத் கமிட்டி வாயிலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக கட்சியினருக்கு, பிரதமர் மோடி ஆலோசனை வழங்க உள்ளார். வரும் 15ம் தேதி கன்னியாகுமரியில், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். இது குறித்தும் இன்றைய தினம் விவாதிக்கப்பட உள்ளது.

சென்னையில் 16 வேட்பாளர்கள்

கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல சென்னையில் போட்டியிடும் 16 வேட்பாளர்களும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் 3 முறை செங்கல்பட்டு, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த முறை, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு மட்டும் அவருடைய பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாம்.. எனவே அவருடைய பயண திட்டத்தில் ரோடு ஷோ இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது..


அண்ணாமலை வருகை

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மீனம்பாக்கம், கிண்டி மற்றும் பிரதமர் பயணிக்கும் பாதைகள் 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தலில் போட்டியிடாத தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, தேசிய அளவில் கட்சி அல்லது மத்திய அரசின் பதவி வழங்க, பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+