இன்று இரவு 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.. சென்னை வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று இரவு 7 மணி வரை மழை பெயக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத அளவுக்கு வானிலை நிலவி வருகிறது. பகல் நேரத்திலேயே சுத்தமாக வெயிலே இல்லாமல் குளிர் நிலவி வருவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று இரவு 7 மணி வரை மழை பெயக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை எச்சரிக்கை
மேலும், அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-01-2026: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-01-2026 முதல் 18-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:
13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாகவும், இயல்பை விட குறையவாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
நாளை (13-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
12-01-2026 முதல் 14-01-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15-01-2026 மற்றும் 16-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகள்:
12-01-2026 முதல் 16-01-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications