இலங்கையை விட்டு கப்பல் மூலம் தப்பி ஆஸி.க்கு செல்ல முயன்ற 35 சிங்களவர் கைது
கொழும்பு: இலங்கையில் சிங்களவர் ராஜபக்சே ஆளும் ஆட்சியில் வாழ முடியாமல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பல் மூலம் தப்பிச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கைதான் அதிகரித்து வந்தது. அவர்களுடன் ஓரிரு சிங்களவரும் சென்று வந்த நிலைமை மாறி 35 சிங்களவர்கள் தப்பி வெளியேறிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கையின் தென்கடற்பரப்பில் இன்று அதிகாலை படகு ஒன்றை கந்தர கடற்பரப்பில் வழிமறித்த இலங்கை படையினர் அதிலிருந்த 35 பேரையும் கைது செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கை கடற்படையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 35 பேருமே சிங்களவர்தான் என தெரியவந்தது. இதுவரை தமிழர்கள்தான் அதிகளவில் பிடிபட்டு வந்த நிலையில் சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக சிக்கியிருப்பது இதுவே முதல் முறை.
அனைவரும் 'இசுறு புதா' என்ற படகு மூலம் பயணிக்க முயற்சித்தனர் என்று இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அனைவரும் காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications