ஆந்திராவில் லாரி மீது மோதிய தனியார் பஸ்.. திருப்பதி சென்று திரும்பிய திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி
அமராவதி: ஆந்திராவில் நள்ளிரவில் நின்ற லாரி மீது தனியார் பஸ் திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற திருப்பதி கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் சாமி தரிசனத்துக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பயங்கரமான விபத்து ஏற்பட்டது. கங்கசாகரம் எனும் பகுதியில் உள்ள திருப்பத்தில் விபத்து ஏற்பட்டது.
அதாவது திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தின் திருச்சி நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரியின் மீது மோதியது. இதில் தனியார் பஸ்சில் பயணித்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவம் பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. இறந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அருசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கங்கசாகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications