அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு நள்ளிரவு வரை கார்கே கெடு! போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையில் அமித்ஷா நீடிக்கவே கூடாது; அமித்ஷா மன்னிப்பு கேட்டுதான் ஆக வேண்டும்; அண்ணல் அம்பேத்கருக்காக நாட்டு மக்கள் எந்தவித தியாகத்துக்கும் தயாராகவே உள்ளனர் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: எங்களுடைய கோரிக்கை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான். பிரதமர் நரேந்திர மோடி, அண்ணல் அம்பேத்கர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தால் அமித்ஷாவை நள்ளிரவுக்குள் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவையில் அமித்ஷா நீடிக்க தார்மீக தகுதியே இல்லை. நாட்டு மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்.. அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து விரட்டியடிப்பார்கள்.. நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்.. நாட்டு மக்கள் அண்ணல் அம்பேத்கருக்காக அனைத்துவித தியாகங்களுக்கும் தயாராகவே உள்ளனர். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜூன கார்கே சந்தித்தார். அப்போது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போதும் அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பின்னரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் மோடிக்கு கெடு விதித்தார் மல்லிகார்ஜூன கார்கே.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications