நாடு பற்றி எரியும்..அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்யுங்க.. மோடியிடம் ராகுல், கார்கே
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நேரில் வலியுறுத்தினர். முன்னதாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கிய நிலையில் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்ககு ராஜ்யசபாவில் நேற்று பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்க முதல்வர்களான மு.க.ஸ்டாலின், சித்தராமையா, மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி எம்பிக்கள் இணைந்து முடக்கி வைத்தனர். நாடாளுமன்ற வளாகத்திலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, அமித்ஷாவை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்துகளை அமித்ஷா பேசியிருக்கிறார். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றப் போகிறது பாஜக என்பதன் தொடக்கம்தான் இது. அம்பேத்கருக்கு எதிரானவர்கள்தான் பாஜகவினர். பாஜகவின் சித்தாந்தமே அம்பேத்கருக்கு எதிரானது. அம்பேத்கர் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசனத்தை ஒழித்துக் கட்டுவதுதான் பாஜகவின் வேலை. ஒட்டுமொத்த தேசமும் இதனை நன்றாகவே உணர்ந்துள்ளது என்றார். மேலும் மனுதர்மத்தை (மனுஸ்மிருதியை) ஏற்கக் கூடியவர்களுக்கு அம்பேத்கர் எரிச்சலூட்டக் கூடிய ஒவ்வாமையாகத்தான் இருப்பார் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நாட்டின் அரசியல் சாசனத்தையும் அண்ணல் அம்பேத்கரையும் அவமதித்துவிட்டார் அமித்ஷா. மனுதர்மத்தை சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள். அரசியல் சாசனத்தையோ அண்ணல் அம்பேத்கரையோ மதிக்க மறுப்பவர்கள்தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய பேச்சுக்காக அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அனைத்து அரசியல் கட்சிகளும் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்த நாட்டு மக்களிடம் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அமித்ஷாவின் இத்தகைய பேச்சு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தேசமும் பற்றி எரியும். அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications