பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! "ஆக்கப்பூர்வ அழிவு" ஆய்வுக்காக மூவருக்கு பகிர்ந்தளிப்பு
ஸ்டாக்ஹோம்: 2025ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் & பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் வெளியாகின.

இதற்கிடையே இப்போது 2025ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் & பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோயல் மோகிர் & பீட்டர் ஹோவிட் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பிலிப் அகியோன் பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆவார்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதை இந்த மூவரும் விளக்கியதற்காக இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைகளைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
"கிரியேட்டிவ் டிஸ்ட்ரக்ஷன்" எனப்படும் ஆக்கப்பூர்வ அழிவு மூலம் நிலையான வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்ததற்காக பிலிப் அக்யான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications