எதிர்நீச்சல்: ஜனனிக்கு எதிராக ஆதாரம் திரட்டும் ஜீவானந்தம்..குணசேகரனுக்கு தெரிய வந்த உண்மை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் ஜனனி படிச்ச பொண்ணு என்பதால வேகமா காய் நகர்த்திக்கிட்டு இருக்கா அதனால சீக்கிரமா பட்டம்மாள் கைரேகை வேண்டும் என்று கூறுகிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் குணசேகரனிடம் உன் தங்கச்சிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்டு சொல்லு என்று ஜான்சி ராணி மிரட்டுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த திருப்பங்கள் நடைபெற தொடங்கி இருக்கிறது. இதுவரை ஆதரை திருமண விஷயமாகவே கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஜீவானந்தம் புது பிரச்சனையை குணசேகரன் வீட்டுக்குள் ஏற்படுத்த போகிறார்.
கோமாவில் இருக்கும் அப்பத்தா கண்விழிக்கும் போதெல்லாம் ஜீவானந்தம் வந்துவிட்டாரா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜீவானந்தம் யார் என்ற கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜனனி முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜனனியின் உயிர் நண்பராக இருக்கும் கௌதம் ஜீவானந்தத்தின் அணியில் ஒரு நபராக இருக்கிறார். இது ஜனனிக்கு இதுவரைக்கும் தெரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் ஜீவானந்தம் நல்லவரா? கெட்டவரா? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜனனி கண்டிப்பாக ஜீவானந்தத்தால் நமக்கு பிரச்சனை தான் வரப்போகிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜீவானந்தத்திற்கு போன் செய்து பேசி விட வேண்டும் என்று ஜனனி செய்யும் வேலைகளை ஜீவானந்தம் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் சொத்து பிரச்சனையில் பட்டம்மாளின் கைநாட்டு வேண்டும் என்பதற்காக குணசேகரன் வீட்டில் இருக்கும் அனைவரையும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்து விட்டு ஆடிட்டரை வீட்டிற்கு வரவைத்து பட்டம்மாள் கைரேகையை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் அதை ஜனனி தடுத்து விட்டார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இந்த ஜனனி ரொம்ப படிச்சவ இல்ல அதனால தான் ஸ்மார்ட்டா கேம் விளையாடுறா? உடனே பட்டம்மாளுடைய கைரேகை எடுத்து ஆகணும். அதுக்குள்ள வழிய பாருங்க என்று ஜீவானந்தம் தன்னுடைய ஆட்களிடம் கூறுகிறார். அதே நேரத்தில் மண்டபத்தில் ஜான்சி ராணி குணசேகரனிடம் உன் தங்கச்சிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையா? அண்ணே என்று கோபத்தோடு கேட்கிறார்.
அதற்கு கதிர் இவங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றாங்க என்று போட்டுக் கொடுக்க, குணசேகரனுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் மீது சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் ஜீவானந்தம் எதற்காக பட்டமாலின் கைரேகையை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications