For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிகளில் கட்டாய நூலக நேரம்!

By Staff
Google Oneindia Tamil News

Library period in schools to become must
சென்னை: தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் வாரம் ஒரு முறை மாணவர்கள் நூலகங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மொழிஞாயிறு தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடந்த விழாவி்ல் பேசிய அவர்,

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நூலகம் செல்வது தான் சிறந்த வழி. மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் இருக்கும் இடைவெளியை வெகுவாக குறைக்க வேண்டும்.

மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டை நூலக எழுச்சி ஆண்டாக அறிவித்துள்ளோம்.

நூலக எழுச்சி ஆண்டு இன்று முதல் அடுத்த 52 வாரங்கள் அனைத்து மாவட்டத்திலும் கொண்டாடப்படும். அப்போது பொதுமக்களுக்கு நூலகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை உருவாக்க பள்ளிகளில் வாரம் ஒரு நாள் கட்டாய நூலக நேரம் கொண்டுவரப்படுகிறது. இதற்கான அரசாணை நேற்று கையெழுத்தானது. இதையடுத்து மாணவர்கள் வாரத்திற்கு ஒருநாள் கட்டாயம் அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதற்காக நமது உலகம் நூலகம் என்ற திட்டத்தை துவக்க விருக்கிறோம். இந்த திட்டத்தின்படி, நூலகங்களை தூய்மைப்படுத்துவது, விழிப்புணர்வு, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நூலக நல வாரியத்திற்கு தொடக்க நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கை, பயனாளிகள் கணக்கெடுப்பு, தொடர் வருவாயை உருவாக்குவது போன்ற பணிகள் இந்த நிதியைக் கொண்டு செய்யப்படும்.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி புத்தக பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரித்தை தொடங்கி இருக்கிறது. இதன் உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, நிவாரண உதவி, குழந்தைகளின் படிப்புக்கு உதவித்தொகை, பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என்றார் தங்கம் தென்னரசு.

பொது நூலக இயக்குனர் அறிவொளி கூறுகையில்,

பொதுநூலகத்துறையின் கீழ் தமிழகத்தில் 4 ஆயிரம் நூலகங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் விரைவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

கொல்கத்தா ராஜாராம் மோகன் ராய் அறக்கட்டளை தமிழக நூலக மேம்பாட்டுக்காக வழங்கியுள்ள ரூ.1.5 கோடி இதற்காக செலவிடப்படும். கம்ப்யூட்டர் மயமாக்குவதன் மூலம் எந்தெந்த நூலகங்களில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன? என்ற விவரத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் அறிந்துகொள்ளலாம்.

பள்ளிக்கல்வி இணையதளத்தில் பொது நூலகத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரிவில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் தங்கள் பெயரை இலவசமாக பதிவுசெய்து கொள்ளலாம்.

அவர்களுக்கு தனித்தனி பதிவுஎண் வழங்கப்படும். பொதுநூலக துறைக்கு விண்ணப்பிக்கும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரும் அந்த பதிவு எண்ணை பயன்படுத்த வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X