இன்று துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா: லியோனிக்கு உற்சாக வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
துபாய்: இன்று (4ம் தேதி) துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக துபாய் வந்த திண்டுக்கல் லியோனி்க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா இன்று (4ம் தேதி) நடக்கிறது. இந்த விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.

மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன், அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸின் மதுரை பிரிவு தலைவர் டாக்டர் எஸ். தன்வந்த்ரி கார்த்திக் வேல் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையிலான குழுவினர் கலந்து கொள்ளும் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் இனியவன், கோவை தனபால், முத்து நிலவன், விஜயகுமார் ஆகியோர் பேசுகின்றனர்.

விஜய் டிவி புகழ் சேதுவின் மிமிக்ரி நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, ஷ்ராவன், நித்யஸ்ரீ, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோகுல் கலந்து கொள்ளும் இன்னிசைக் கச்சேரி நடக்கிறது.

உற்சாக வரவேற்பு

ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று துபாய் வந்த திண்டுக்கல் ஐ. லியோனிக்கு உற்சாக வரவேற்பளி்க்கப்பட்டது. அவருடன் அவரது துணைவியார், விஜய் டிவி புகழ் சேது, இசையமைப்பாளர் பிரகாஷ், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, ஷ்ராவன், நித்யஸ்ரீ, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வந்தனர்.

அனைவரையும் துபாய் தமிழ்ச் சங்க நிறுவன புரவலர்கள் ஏ. லியாக்கத் அலி, ஏ. முஹம்மது தாஹா, பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன், இணை பொருளாளர் சுந்தர், கமிட்டி உறுப்பினர்கள் பிரசன்னா, விஜயராகவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary

 Dubai Tamil Sangam is celebrating its 10th annual day today (november 4th) in Sheikh Rashid auditorium, Indian high school,Dubai. Former Mauritius minister Arumugam Parasuraman is the chief guest. Dindigul Leoni, music director prakash, Vijay TV fame Sethu and others who reached Dubai on november 3 have been given a warm welcome.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற