For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தம்பதியரிடையேயான நெருக்கத்தை ஸ்கூட்டரின் அமர்ந்து போவதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். புதிதாக திருமணமான ஜோடி என்றால் நெருக்கம் கூடி கணவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டு போவார்கள். இதே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டால் கணவரின் தோளை தொட்டுக்கொண்டோ, அல்லது ஸ்கூட்டரில் கம்பியை பிடித்துக்கொண்டோ பயணிப்பார்களாம்.

மணமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டால் நடுவில் குழந்தை அமரவைத்துக்கொண்டு பின்னால் பட்டும் படாமல் மனைவி அமர்ந்து கொண்டு வருவாராம். இதன் மூலம் அவர்களின் நெருக்கம் இல்லறத்தில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் மணமாகி பத்தாண்டுகளோ, வெள்ளிவிழா ஆண்டுகளோ ஆனாலும் புதுமணத் தம்பதிகளைப் போல என்றைக்கும் உணரமுடியும் அது அவரவர் கைகளில்தான் இருக்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.

திருமணமாகி முதல் திருமண நாளை கொண்டாடுவதைப்போலவே பத்தாண்டுகள் கழித்தும் அதே நினைவுகளுடன் கொண்டாடும் தம்பதியரிடையேயான நெருக்கம் கூடுகிறது என்றும் தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.

சிலிர்ப்பான தருணங்கள்

சிலிர்ப்பான தருணங்கள்

காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு திருமணம் என்பது மிகப்பெரிய சிலிர்ப்பினை ஏற்படுத்துவதில்லை. பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் முடிப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதிலும் தாலிகட்டும் போதோ, மோதிரம் அணிவிக்கும் போதோ ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். முதன் முதலாக கைத்தலம் பற்றும் தருணங்களை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது என்பார்கள்.

"உன் விரல் பற்றி நிமிடத்தில் என்னுள் மின்சாரம் பாய்ந்தது...." என்று மணநாளில் மனைவியைப் பார்த்து கவிதை பாடுங்களேன். அப்புறம் கணவரின் ஸ்பரிசம் படும்போதெல்லாம் இந்த சிலிர்ப்பு மனைவிக்கு ஏற்படும்.

முதல்மழை எனை நனைத்ததே…

முதல்மழை எனை நனைத்ததே…

முதல் காதல், முதல் முத்தம் போல ஒவ்வொருவருக்கும் முதல் இரவு என்பது மறக்க முடியாத தருணம்தான். அந்த நாளை ஒவ்வொரு திருமண நாளிலும் நினைத்து மகிழ்ச்சியடைவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு மணநாளும் புதுமணநாளாய் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.

பிரியாத வரம் வேண்டும்

பிரியாத வரம் வேண்டும்

கணவன் மனைவி உறவு என்பது மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முற்படுவதில்லை. இதை ஒவ்வொரு திருமணநாளிலும் நினைத்துப் பார்த்து மகிழவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

மனைவி அமைவதெல்லாம்…

மனைவி அமைவதெல்லாம்…

ஆண்களுக்கு மனைவி அமைவது எப்படி இறைவன் கொடுத்த வரமோ அதேபோல பெண்களுக்கும் கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம்தான். எனவே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்பவர்களாக அமைந்துவிட்டால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு எதுவும் இல்லை.

இரவில் கண்மூடும் தருணத்தில்
நான் காணும் காட்சி உன்முகம்தான்...
அதிகாலை விழிக்கும் போது
நான் பார்க்கும் முதல் காட்சி
உன் முகம்தான்...
என் முதலும் முடிவும் நீயே...
என்று மனைவியைப் பார்த்து பாடுங்களேன். அப்படியே சொக்கிப் போவார் உங்கள் மனைவி.

உலகமே கணவர்தான்…

உலகமே கணவர்தான்…

இன்றைக்கும் பெரும்பாலான பெண்களின் உலகம் கணவரைச் சுற்றிதான் அமைகிறது. கணவர் சொல்வது, செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மணநாளில் ஒரு புடவை பரிசளித்துப் பாருங்களேன் அப்படியே பூரித்துப் போவார். அதை உடுத்தும் தருணங்களில் எல்லாம் மனைவியின் முகத்தில் வெட்கச் சாந்து பூசிக் கொள்ளும்.

பத்திரமா பாத்துக்கங்க….

பத்திரமா பாத்துக்கங்க….

அரும்பாடு பட்டுக்கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் எனில் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும்.

ஆடை போல இருங்கள்

ஆடை போல இருங்கள்

தம்பதியர் இருவரும் ஆடையைப் போல இருக்கவேண்டும் என்பார்கள். அதாவது ஆடைகள்தான் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. கணவனின் மரியாதையைக் காப்பதில் மனைவிக்கு பங்குண்டு. அதேபோல் மனைவியின் மரியாதையை காப்பதில் கணவருக்கும் பங்குண்டு. இதை அனைத்து தருணங்களிலும் தம்பதியர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அது பரம ரகசியம்

அது பரம ரகசியம்

கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவருக்கும் இடையே நடக்கும் அந்தரங்கம் கருவறையில் இருக்கும் இறைவனைப் போல ரகசியமானது மேலும் புனிதமானது. இதைப் போய் அம்பலப்படுத்தினால் அதைப்போல ஒரு அருவெறுப்பான செயல் வேறு எதுவும் இல்லை என்கின்றனர். எனவே தாம்பத்யத்தின் புனிதம் காப்பதோடு மணவாழ்க்கையின் மாண்பையும் காக்க முற்படும் தம்பதியரே மணிவிழா காணும் வரைக்கும் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
A wedding anniversary comes only once a year which is why couples wish to make the occasion as special as possible. But celebrating this wonderful day need not mean that you have to do what every other couple does or spend pots of money. Here are a few creative ways to celebrate your wedding anniversary and build up a store of happy memories for a long time to come.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X