For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Red Rose
காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரின் வழியே தங்களின் அன்பை பகிர்ந்துக் கொள்கின்றார்கள். ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களையும், குறிப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

காதலை உணர்த்தும் சிவப்பு

சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. ஆனால் வரலாற்றில், பல கலாச்சாரங்களில் அரசியல் மற்றும் மத குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை தெரிவிக்கும் மஞ்சள்

வரலாற்றில், மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் காதல் அம்சம் இன்றி, பாலியலற்ற நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.

மதிப்பிற்குரிய செம்மஞ்சள்

மஞ்சளும் சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள் ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது. ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

வசீகரிக்கும் ஊதா

ஊதா நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு என்பனவற்றை குறிக்கிறது.

தூய்மையை குறிக்கும் வெள்ளை

ஆரம்ப காலத்தில் வெள்ளை ரோஜாவை உண்மையான காதலின் குறியீடாக பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது. மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின் தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.

அதேவேளை கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும் அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.

நன்றியை தெரிவிக்கும் இளஞ்சிவப்பு

இளஞ் சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது. கடும் இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது. மிருதுவான இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் அனுதாபத்தை தெரிவிக்கவும் இளம் சிவப்பு ரோஜா தரப்படுகிறது.

English summary
When you send flowers you send more than beautiful blossoms you send a message from your heart and the rose is a perfect choice for expressing the nuances of your deepest feelings. The language of color has a long history of tradition. Today color meaning interpretations are multi-faceted. Here are the most widely recognized meanings associated with rose color:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X