For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலை வழுக்கை விழுதா? மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாம்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Male baldness indicates heart disease risk
தலையில் முடி கொட்டி வழுக்கை விழும் ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். வழுக்கையான ஆண்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 37,000 ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இருதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருக்கிறதாம்.

தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

11 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இளம் வயதிலேயே வழுக்கை தலையான ஆண்களுக்கு 70 சதவிகிதம் இதயம் தொடர்பான நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும், இருதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர்.

அதேசமயம் வழுக்கைத்தலையை விட, புகை பிடிப்பதினாலும் உடல் இந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய மேலும் முக்கியமான அம்சங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே ஆண்கள் முடி எண்ணிக்கையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தங்களின் இடுப்பு அளவைப் பற்றி அதிகம் கவலைப்படவேண்டும் என்கின்றனர் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு முடிவு பி.எம்.ஜே என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

English summary
Men who are bald have a much higher chance of developing coronary heart disease compared to their full headed peers, according to a new study. Researchers said male pattern baldness is linked to an increased risk of coronary heart disease, but only if it's on the top or crown of the head, rather than at the front.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X