சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா: பர்வீன் சுல்தானா பங்கேற்ற "வெற்றிக் கொடி கட்டு" நிகழ்ச்சி
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் மொழி விழா 2018ன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 22-04-2018 அன்று, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் பர்வீன் சுல்தானா வழங்கிய "வெற்றிக் கொடி கட்டு" எனும் தன்முனைப்பு மற்றும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.
சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர், முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் வாழ்வில் வெற்றிப் பெற கடைபிடிக்க வேண்டிய அம்சங்களை அழகுற எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர், குமாரி கே. தனலெட்சுமி சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்டார்.

ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர்கள் விக்னேஷ் மணி, காமராஜ் திருக்குமரன் மற்றும் ராஜேஸ் முத்து ஆகியோர் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பறைசாற்றும் வண்ணம் "மாணவர் அங்கம்" என்ற நிகழ்ச்சியைப் படைத்தனர்.
சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர், தன் தலைமையுரையில் "நாம் அனைவரும் வீட்டில் கட்டாயமாக தமிழிலேயே பேச வேண்டும் என்றும், தமிழ் நூல்களை நிறைய வாசிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

தமிழ் மொழியிலும், GCE "O" LEVEL பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூகத்திற்கும் சேவையாற்றிய தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு மு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு, "ஜமாலியன் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி அனுமிதா முரளி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, சங்கத்தின் துணைத்தலைவர் திரு கலந்தர் மைதீன், நிகழ்ச்சியை வழிநடத்தினார். சிறந்த நேர மேலான்மையோடு, உரிய நேரத்தில் நிகழ்ச்சியைத் துவங்கி, விழா நிறைவுற்றதைப் பலரும் பாராட்டினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications