தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் எழுத்தறிவு புரட்சி நடத்தும் இந்தியா லிட்ரசி அமைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: India Literacy Project அமைப்பு பிப்ரவரி 17ம் தேதி சென்னையில், மயிலாப்பூர், டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சாவேரா ஹோட்டலில் (Savera Hotel) கல்வி நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, இந்த அமைப்பு லாபநோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 100 சதவீதம் எழுத்தறிவை கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று இந்த அமைப்பின் வெப்சைட்டில் வெப்சைட்டில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

What is India Literacy Project?

கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களை தேடிச் சென்று கல்வியறிவு கொடுத்து வருகிறது இவ்வமைப்பு. தமிழகம் உட்பட இந்தியாவின் 17 மாநிலங்களில் சுமார் 100 திட்டங்களை இந்த அமைப்பு செயல்படுத்தி அசத்தி வருகிறது. சுமார் 3,00000 மக்களுக்கு பலன் கிடைத்து வருகிறது.

அனைத்து வகை வயதுள்ளோரிடமும் கல்வியறிவை வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.

தமிழகத்தில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்விக்காக $11,328.00 செலவில் திட்டத்தை செயல்படுத்துகிறது இந்த அமைப்பு. செங்கல் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்காக $23,522.00 என்ற அளவுக்கு திட்டத்தை வகுத்து செயல்படுத்துகிறது.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இவ்வமைப்பு எழுத்தறிவு திட்டங்களை செயல்படுத்தி சேவையாற்றி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"To empower every individual we serve with functional literacy and an understanding of their basic rights and responsibilities", says India Literacy Project organization.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற