For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன 500 ரூபாயும், 1000 ரூபாயும் பேசிக் கொண்டால்!

Google Oneindia Tamil News

சென்னை: காணாமல் போன ஆயிரம் ரூபாயும், 500 ரூபாயும் ஒன்றுக்கொன்று பேசிக் கொண்டால் எப்படி இருக்கும்.? ஒரு கற்பனை.

ம்.. வருஷம் ஒன்னாச்சு .

எவ்வளவு நாள் தான் இந்த சாக்குப் பைக்குள் அடைந்தே இருப்பது. அட எப்ப திறப்பாங்கன்னே தெரியலயே.

When abolished Rs 500 and 100 currencies met

எவ்வளவு சுதந்திரமாக சென்ட் போட்ட சட்டை பைக்குள்ளும் ஸ்டைல் மணி பர்ஸுக்குள்ளும் சுகமா இருந்தோம். இப்ப இப்படி ஆகிப் போச்சே

எப்படியெல்லாம் சூட்கேஸ் மாறி சூட்கேஸ் மாறி, கை மாறி கை மாறி சுதந்திரமாக பல ஊர் பல பேர்கிட்ட சுத்திக்கிட்ருந்த நம்மளை என்ன பாவம் பண்ணினோம்ன்னு இப்படி சிறை வச்சாங்க

ஏடிஎம் இயந்திரத்தின் சடக் கடக் சத்தத்தோடு நாம் கட்டு கட்டாக வெளியே வந்து எட்டிப் பார்ப்பதை எத்தனை கண்கள் ஆவலோடு பார்த்துக் கொண்டு வரிசையில் நமக்காக காத்திருக்கும். இப்போ அந்த மரியாதை போச்சே.

நம்மைப் பார்த்ததும் சிரிக்கும் முகங்களையும் விரியும் விழிகளையும் இனி எப்போது பார்ப்பதோ. சே பணக்காரர்களின் செல்லப் பிள்ளைகளாய் இருந்த நம்மை செல்லாத தாள் ஆக்கிட்டாங்களே

கருப்பு பணத்தை ஒழிக்கிறேன்னு சொன்னவர் கருப்பு பணமா நம்மளை வச்சிருந்த முதலைகளை பிடித்து சிறையில் வைப்பதை விட்டுவிட்டு அப்பாவியான நம்மளை பிடிச்சு இப்படி "கருப்பு ரூம்"ல அடைச்சு போட்டுட்டாங்களே

ஆமா புது தாள் வெளியிட்டதும் அங்க எல்லாம் சரி ஆகிருமோன்னு பார்க்க ஆசையா இருக்கு.

என்னத்தை சரி ஆச்சு.. சரி ஆக விட்ருவாங்களா நம்ம ஊரு பண முதலைகள்

கத்தை கத்தையாய் ஒளிச்சு வச்சதை பேங்க்ல போடாம ப்ரோக்கர் மூலமா மாத்தி கமிஷன் அடிச்சாங்களே சில நல்ல உள்ளங்கள். அவங்க சுதந்திரமாதானே இருக்காங்க. அப்பறம் அந்த பணத்தை அப்படியே நல்ல பணமா மாத்த உதவி செய்தார்களே அந்த நல்ல உள்ளங்கள் அப்புறம் கருப்பு பணத்தை மொத்தமா மாத்த கை கொடுத்தாங்களே பேங்க் அதிகாரிகள் .... இப்படி "நல்ல நல்ல" உள்ளங்கள் இருக்கும் வரை ஒன்னும் மாறாது அப்படி தான் இருக்கும்.

உண்மைதான், இப்ப நமக்குப் பதில் புதுசா வந்த 500 ருபாய்க்காரனும், 2000 ரூபாய்க்காரனும் சுதந்திரமாக சுத்திட்டிருக்கான். அதுதான் நடந்தது.

வாஸ்தவம் தான் அப்போ தினந்தோறும் மணிக்கணக்கா பேங்க் வாசலில் வரிசையில் நின்ற அந்த சாதாரண மக்கள் நிலைமை?.

அதோ கதிதான்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று பெருமூச்சு விட்டது அந்த 1000 ரூபாய் தாள். ஆமா எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே என்று ஆமா போட்டது 500 ரூபாய் தாளும்

- Inkpena சஹாயா

English summary
An imaginory conversation between Rs 1000 and 500 currencies, sent by our reader and writer Inkpena Sahaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X