பாரே! பார்!! : தமிழன் வீரியம் எப்படியிருக்கும்?! எண்ணிப்பார்...

Subscribe to Oneindia Tamil
  உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ

  சென்னை: உலகம் முழுவதும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட #gobackmodi டிரண்டிங் குறித்து நமது வாசகர் தமிழ்க்கோ எழுதியுள்ள கவிதை.

  A Poem on GoBackModi Hashtag Trending

  பாரே! பார்!!

  ஒரு "வரிக்குரல்" ஓங்கியதோ உலகின் செவிப்பறை இன்று வீங்கியதோ?!

  செருமிய வரிப்புலி உறுமியதோ அதன் செய்தி நெருப்பிட வான் கருகியதோ!

  எட்டு திசை கொட்டிய முழங்கு எதிரி செவிமடல் கிழித்த போர்ப்பறை சங்கு!

  விரல் விட்டு கிளம்பிய வில்லில் எறிகணை ...

  அது விட்"டுவிட்ட"தில் பல்கிப் பாய்ந்துப்பரவிய பல்குழல்க ணை.

  பற்றி எரியும் தீ .அது எரிந்து பற்றும் தீ

  சுண்டு விரலின் வீரியம் இதுவெனில் தமிழன் சுட்டு விரலின் காரியம் எப்படியிருக்கும்?! எண்ணிப்பார் ..

  பாரே பார்!

  பட்டுதான் பகை உணரும் எனில் ...

  கண்கெட்டு கதிரை நோக்கட்டும்.

  எமக்கென்ன ?

  இட்ட தீ
  கொழுந்துவிட்டு எரியுது
  பார் அதம் பார்!
  பாரதம் பார்!

  பாரே! பார்!!
  பாரதம் பார்!!

  - தமிழ்க்கோ

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Poem on GoBackModi Hashtag Trending. Earlier Tamilnadu did a massive black flag showing protest Against PM Modi visit on Yesterday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற