குழந்தைகள் தினம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனிப்பு மிட்டாய் சகிதம் பள்ளியில்.
கொண்டாடுகின்றன நம் வீட்டு குழந்தைகள்.. ..
வசதியான குடும்பங்களில்
மத்திய வர்க்க வீடுகளிலும்
என்றும் குழந்தைகள் தினம் தான்....
இருக்க நல்ல இடம், உடுக்க நல் உடைகள்...

Children's day today

புசிக்க ருசியாய் ஆரோக்கிய உணவு கிடைக்கும்
எல்லா குழந்தைகளுக்கும்
வருடத்தின் அனைத்து நாட்களுமே குழந்தைகள் தினமே!..
இந்த நாள் அவர்களுக்கு போனஸ் தான்...
மற்றொரு புறம்.....
இவை எதற்கும் வழியில்லாத ஏழைக்குழந்தைகளுக்கு
இதுவும் ஓர் பசி மிகு தினமே....
இன்னமும் நம் கண்களுக்கு தெரியாமல்
வறுமையின் காரணமாய்
பள்ளிப் பக்கம் செல்ல இயலாத
குழந்தை தொழிலாளர்களுக்கும்
தம் பிஞ்சுக்கரங்களால் வேலை செய்து கொண்டிருக்கும்
சொந்தங்கள் யாருமற்ற அனாதைக்குழந்தைகளுக்கும்
மற்றும் கொத்தடிமை வாழ்வில் உழன்று கொண்டிருக்கும்
குழந்தைகள் அனைவருக்கும் எந்த நாளில்
நம் பிள்ளைகளுக்கு கிடைத்திடும்
வசதி வாய்ப்புகள் சந்தோஷங்கள் கிடைத்திடுமோ
அன்றுதானே உண்மையில் குழந்தைகள் தினம்!

- ஆகர்ஷிணி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is a poem on Children's day which is being celebrated in India today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற