நீ.. நான்.. நாம்!
Subscribe to Oneindia Tamil
நான் வாசித்து
உருகி கரையும்
அத்தனை கவிதைகளின்
வரிகளிலும் வந்துபோகும்
"நீ" என்ற அந்த ஒற்றை சொல்
நிச்சயமாய் நினைவுபடுத்தி
செல்வது உன்னை மட்டுமே...!
நான் வாசித்து
உருகி கரையும்
அத்தனை கவிதைகளின்
வரிகளிலும் வந்துபோகும்
"நான்" என்ற அந்த ஒற்றை சொல்லில்
அழுது தீர்க்கிறது
என் ஆசைகளும்
என் ஆற்றாமைகளும் ...!

நான் வாசித்து
உருகி கரையும்
அத்தனை கவிதைகளின்
வரிகளிலும் வந்துபோகும்
"நாம்" என்ற அந்த ஒற்றை சொல்லில்
ஒரு வாழ்க்கையை உன்னோடு
ஒருமுறை வாழ்ந்து பார்த்து
மடிகிறது என் கனவுகள் ...!
- யாழினி வளன்












Click it and Unblock the Notifications