For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மற்றொன்று

By Staff
Google Oneindia Tamil News
Festivals
கருணாவுடன் இன்று பள்ளியிலிருந்து நிடந்து வருகிறேன். நான் தினம் நடப்பேன் என்றாலும் கூட கருணாவுடன்நடந்து வருவது அரிது. இன்று வண்டி வரவில்லை. காரணம் ஏதாயினும் எனக்குச் சந்தோஷம் தான் வண்டிவராததில்.

இல்லையென்றால் அவளுடன் இணையாக நடந்து வர முடியுமா? கருணா பள்ளியில் எல்லோருடனும் பேசமாட்டாள்.

அவள் இவ்வருடம் தான் வந்திருக்கிறாள். அவள் தினம் அழகான பாவாடை கட்டி வருவாள். சற்று அதிகமானகருப்பாக இருந்தாலும் உடைகள் அவளுக்கு கச்சிதமாக பொருந்துகின்றன. நகைகள் பளிச்சென்று மின்னுகின்றன.அவள் தினம் அழகான செருப்புகள் அணிந்து வருவாள்.

அவளின் அம்மா, அப்பா இருவருமே இளமையாக இருக்கின்றனர். அவளின் அம்மா ஆறு கெஜ புடவைஉடுத்துகிறாள். தலையைத் தழைய தழைய பின்னுகிறாள். புடவை மடிப்பாகத் தோளில் தொடங்குகிறது.

என் அம்மா, வெளுப்பாக இருந்தால் கூட மூக்கை இருபக்கம் குத்திக் கொண்டு காதில் கல் தோடு அணிந்து,ஒன்பது கெஜம் புடவை கட்டிக் கொள்கிறாள். அம்மாவிற்கு நான் எட்டாவது குழந்தையாக இருப்பதன் காரணமாகஅவள் வயதும் அதிகம் கூடி விட்டிருக்கின்றது.

இவ்வளவு நீளமான முடியை ஏனோ இந்த அம்மா எப்போதும் இழுத்து மூடிக் கொண்டே உள்ளாள்.

எனக்கு அதிகம் பாவாடைகள் கிடையாது. இரண்டு வெளியிலும், மூன்று வீட்டிலும் அணிய உண்டு. ஏறக்குறையஎல்லோமே பருத்தி சார்ந்தவை. அம்மாவுக்கும் அப்படித்தான். கருணாவைப் போல எனக்கும் அதிகமானகலர்களில் பல ரகங்களில் உடை வேண்டும். அம்மாவின் கொள்கைகளுக்கு அவை சரி வருவதில்லை.

தேவைக்கு அதிகமாக எதுவுமே இருக்கக் கூடாது. உழைப்பு என்னவென்பதை தெரிந்து கொள். தேவைக்குஅதிகமாக சேர்ப்பவன் விரோதி எதுவுமே புரிவதில்லை.

சுதந்திரம் நாட்டிற்குக் கிடைத்தது குறித்து பண்டிகை கொண்டாடப்பட்டது. கொடிக் கலரில் கேக் எங்கள் கடையில்செய்யப்பட்டு நாதஸ்வர இசை முழங்க அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

கடை ஊழியர்களுக்கு அன்று குறிப்பிட்ட சலுகைகள் பணத்துடன் கிடைத்தன. அந்தப் பெரிய வீட்டின் மீதுமூவர்ணக் கொடி பறக்க அனைவரும் பரவசப்பட்டனர். வீட்டில் சூடான விவாதங்கள் - நாட்டு நடப்பு பற்றியவை -அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அப்பாவும் மிகவும் வயசானவராக இருக்கிறார். வெறும் வெள்ளைக் கதர் வேட்டிதான் கட்டுகிறார்.சட்டையும் வெள்ளைக் கதர் தான். முன் தலைமுடியை அடிக்கடி எடுத்து விடுகிறார். கருணாவின் அப்பா போலஒரு நாளாவது பேண்ட் அணிந்து கொள்ள மறுக்கிறார்.

கருணாவின் அப்பா அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவர் வீட்டில் அலுவல் பணியாட்கள் எப்போதும்சுத்தமான உடையுடன் உதவி செய்கிறார்கள்.

தந்தையின் அலுவல் மாற்றல் காரணமாக பல ஊர்களின் பள்ளிகளில் அனுபவம் பெற்று வந்து அதன் காரணமாகஉயரம் கூடக் காட்சி அளிப்பவள் கருணா. வெளுப்பு மட்டும் அழகல்ல, கருப்பு கூட அழகுதான் என்றஅணுகுறை காரணமாக ஏற்றுக் கொள்ளச் செய்த கருணா.

கருணாவின் வீடு கடந்து இன்னும் சில அடிகள் கூட நடக்க வரும் என் வீடு. தொலைவில் இரு வீடுகளின்கப்புகளும் அடுத்தடுத்துத் தெரிய தொலைவு புலப்படாதது. கருணாவின் வீட்டு கேட்டில் ஒரு குச்சி ஊன்றியமனிதன் நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபடியே இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம்.

அவள் வீடு வரும்போது - அவள் வீட்டு வாசலிலேயே சாப்பிட்ட பின் லுங்கியுடன் சாய்வு நாற்காலியில் கைகளைஉயரத் தலைக்கு மேல் வைத்தபடி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அவளின் தந்தையின் முகம் மட்டும் கோபத்தின்ஆரம்பச் சலிப்பில் இருந்தது.

போகச் சொல்லி, விரட்டி விரட்டிப் பார்த்த அலுப்பு பேச்சின் ஒலியில் வெளிப்பட்டது. கருணா கேட்டைத் திறந்துஉள்ளே போக எத்தனிக்கும்போது அவரது கோபம் எல்லை மீற, வெறி கொண்டவரைப் போல எழுந்தவர்விரைந்து வந்து அந்த மனிதனின் கட்டையைப் பிடுங்க முற்பட்டார்.

அந்தக் கட்டை அவனுடைய நிலை நிற்கும் காரியத்தை கால்களுக்கு உதவியாகச் செய்து கொண்டிருந்தது. உடல்தடுமாறி தள்ளாடி மல்லாந்தது.

அந்தக் கட்டை கொண்டு அவனின் நகர முடியாத இயலாமையை சாதகமாக்கிக் கொண்டு கருணாவின் அப்பா,அந்த மனிதன் தன் பொறுமையை சோதித்தது பற்றியும், தன் பொறுமையின் எல்லை பற்றியும் கூறிக் கூறி அவனைஅடிக்கத் தொடங்கினார்.

கீழே மல்லாந்தவனின் அலறல் பெரிதாக எதிரொலிக்க ஆரம்பித்தபோது, எதுவுமே நடைபெறாத மாதிரி கருணா,நிலைக் கதவை கடந்து உள்ளே போனாள். என் கால்கள் நடுக்கத்தின் துவக்கத்தில் இருந்தன.

கண்கள் மொலு மொலு மொலுவென்றாயின. நீண்ட தூரம் ஓடிய பிறகு துடிக்கும் துடிப்பு இதயத்திலும் மூச்சிலும்இப்போது.

தலை தவிர உடல் முழுவதும் துவளத் துவள நடுங்கியது. கருணாவின் அப்பா கையில் இருந்த தடியைப் பிடுங்கிஅவரை அடிக்க மனம் வெறி கொண்டது.

உருவம் வயதும் அதை சாத்யமாக்கத் தடையாய் நின்றன. ஓவென்று மனதில் அழுதபடி என் வீடு வந்தேன்.அம்மா தட்டில் சாப்பாடு போட்டுக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு கருணா வீட்டு வாசலுக்குச் சென்றேன்.

அது வெறிச்சிட்டுக் கிடந்தது. என் வினோதமான செயல் கண்டு அம்மா என்னைப் பின் தொடர்ந்து வந்து என்னைத்தொட விக்கி விக்கி அழ ஆரம்பித்தேன். அந்த மனிதன் ஏன் என் வீட்டிற்கு வரவே இல்லை?

- க்ருஷாங்கினி([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. எலி
2. இரக்கம் ஒரு பலவீனம்?
3. " உளைச்சல்"
4. மூன்று அங்குலப் பிரவாகம்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X