For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன பண்றீங்க.. "சும்மா"தான் இருக்கேன்.. அப்ப இதைப் படிங்க முதல்ல..!

Google Oneindia Tamil News

"டாடி.. ஒரு டவுட்டு"

"வா பேபி.. என்ன டவுட்டு"

"முட்டைல இருந்து கோழி வந்துச்சா.. இல்லை கோழில இருந்து எக் வந்துச்சா.. சொல்லுங்க டாடி"

"பேபி.. நீ இன்னும் 90ஸ் கிட்ஸ் மாதிரியே விளையாடிட்டிருந்தா.. ஒருத்தரும் உன் கூட பேச மாட்டாங்க சரியா"

"முதல்ல ஆன்சர் சொல்லுங்க டாடி.. சும்மாதான் கேட்டேன்"

"சும்மா கேட்டியா.. சும்மான்னா.. என்ன சும்மாவா இருக்கு.. ."

"சும்மா கேட்டா தப்பா டாடி"

"சும்மால எவ்வளவு விஷயம் இருக்கு தெரியுமா.. "

Very interesting whatsapp message on Summa

"சும்மால என்ன இருக்கு.. சும்மா டூப் அடிக்காதீங்க டாடி"

"இப்படி வந்து உக்காரு.. காலைலதான் ஒரு மெசேஜ் பார்த்தேன்.. யாரோ ஒரு பிரகஸ்பதி வாட்ஸ் ஆப்ல அனுப்பிருந்தான்.. .அதைப் படிச்சுட்டு எனக்கு தலையே சுத்திருச்சுன்னா பார்த்துக்கயேன்"

"அப்படி என்ன மெசேஜ் அது"

"சும்மா யாரோ அனுப்பிய மெசேஜ்தான்.. மேட்டரும் அந்த சும்மா பத்திதான்"

"அட பிளேடு போடாம மேட்டரை சொல்லுப்பா"

இந்தா.. நீயே படிச்சுப் பாரு..

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.

அது சரி *சும்மா* *என்றால் என்ன??

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், "சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கொரோனா, ஊரடங்குனு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா.. அப்போ இதைப் பாருங்க.. உங்களுக்கு நம்பிக்கை தானா பிறக்கும்!கொரோனா, ஊரடங்குனு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா.. அப்போ இதைப் பாருங்க.. உங்களுக்கு நம்பிக்கை தானா பிறக்கும்!

அதைப் பத்திப் பார்க்கலாம் வாங்க

1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா? ( *அமைதியாக/Quiet*)

2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது! (அருமை/in fact)*

4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு* நினச்சியா? (இலவசமாக/Free of cost)

5. *"சும்மா" கதை அளக்காதே?* (பொய்/Lie)

6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* - (உபயோகமற்று*/Without use)

7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)*

8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*. (எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*- (தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது* (காலி/Empty)

11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.* (மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)

13. *"சும்மா"தான் இருக்கின்றோம்* (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* - (வெட்டியாக/idle)

15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்* (விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த "சும்மா" *என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது "சும்மா" இல்லை!

இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல!

"என்னம்மா பொண்ணு.. எப்படி இருந்துச்சு.. சும்மா அதிருதுல்ல"

"அய்யோ டாடி.. இனிமே எனக்கு டவுட்டே வராது.. வந்தாலும் உங்க பக்கம் தலை வச்சுக் கூட படுக்க மாட்டேன்.. ஆளை விடுங்கடா"

"சும்மா" ஒரு மெசேஜ் பாத்ததுக்கு எதுக்கு இந்தப் பொண்ணு "சும்மா" இப்படி அலட்டிக்குதுன்னு.. புலம்பிக் கொண்டு சென்றார் அந்த பரிதாபத்துக்குரிய தந்தை!

English summary
Whatsapp messages will be interesting sometimes and this is one of the messages which is very interesting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X