For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரசி பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும் இந்த ஆண்டு இந்த நிறைவுத்தரிசி பூஜை விழா வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி கேரளா முழுவதும் நடத்த ஜோதிட பண்டிதர்கள் நாள் குறித்துள்ளனர்.

Aadi month Nirai putharisi Pooja.. Sabarimala Ayyappan temple walk opening today

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நடை திறந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும்.

இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை பகவான் ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும் இதற்காக செட்டிகுளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது இந்த நெற்கதிர்கள் இன்று அறுவடை செய்யும் பணி பூஜை செய்து துவங்கியது.

அறுவடை செய்த நெற்கதிர்கள் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டு இந்த நெற் கதிர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நெற்கதிர்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் வைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பூஜைகள் நடத்தப்படுகிறது அன்று இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும் நாள் முழுவதும் நெய்யபிஷேகம் அஸ்டாபிஷேகம் உஜபூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

கேரளாவில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை

Recommended Video

    ஆடிப்பெருக்கு என்றால் என்ன ? ஆடிப்பெருக்கும் மகாபாரதமும் | Aadi Perukku 2022

    நாட்டில் விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக, ஆண்டுதோறும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.இதன்படி கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, திக்குறிச்சி மகாதேவர், நாகராஜா உள்ளிட்ட முக்கிய கோவில்களில், நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெற உள்ளது. திருக்கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களில் இருந்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அவை, குமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, மேள- தாளங்கள் முழங்க, ஊர்வலமாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு, நெற்கதிர்கள் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்படும். அதன்பின், பக்தர்களுக்கு, அந்த நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. நிறை புத்தரிசி பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை வீட்டின் முன் கட்டி வைத்தால், வளம் செழிக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    English summary
    Sabarimala Ayyappan Temple is opening today evening for the Aadi month Nirai putharisi Pooja. Devotees are prohibited from using the Pampai River and Neeli Hill route due to rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X