திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: பக்தர்கள் இன்றி கொடியேற்றம் - ஆன்லைனில் தரிசனம்
திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவில் பங்கேற்க இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என அறிவித்திருந்தது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதிகாலை 5.45 மணி அளவில் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் கோவில் கொடி மங்கள வாத்திய இசையுடன் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன. ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 நாட்கள் திருவிழா
12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 31ஆம் தேதி 5 ஆம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், செப்டம்பர் 02ஆம் தேதி 7ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 03ஆம் தேதி 8ஆம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பிரம்மா, விஷ்ணு, சிவன்
முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும். சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

கோவில் வளாகத்தில் உலா வரும் முருகன்
10ஆம் தேதியன்று நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்குள் வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகம விதிப்படி திருவிழா
ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் ஆவணி திருவிழா, ஆகம விதிப்படி பக்தர்களின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் ஏமாற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணற்றில் நீராட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலிலும் நாழிக்கிணறிலும் புனித நீராட அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது ஆவணித்திருவிழா தொடங்கியுள்ளதால் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications