அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராட தடை - சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதியில்லை

ஆவணி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோவிலுக்கு வர வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கே

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ஆவணி அமாவாசை நாளான 6ஆம் தேதி திங்கட்கிழமையன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட மற்றும் திதி தர்ப்பண பூஜை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திதி அமாவாசை. வரும் 6ஆம் தேதியன்று சர்வ அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமானோர் நீர் நிலைகளில் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

Amavasai: Ban on holy bath at Rameswaram - Devotees are not allowed to visit Saturagiri Hill

கொரோனா பரவல் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிசாலைகள் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் நடமாட்டம் குறைவாக இருந்து.

வரும் 6ஆம் தேதி திங்கட்கிழமை சர்வ அமாவாசையாக இருப்பதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 6ஆம் தேதி அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட மற்றும் திதி தர்ப்பண பூஜை செய்யவும், கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்தும், மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக இதுபோன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய தடை

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் பௌர்ணமி ,அமாவாசை தினங்களில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக சதுரகிரியில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

சனிப்பிரதோச தினமான இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். எனவே இன்று முதல் 6ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+