சபரிமலையில் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்த அனுமதி - தபாலில் தேடி வரும் அரவணைப் பிரசாதம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 11 நாட்களில் ரூ.10 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. பக்தர்கள் கோவிலில் வெடி வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பிரச்சினையால் தடை விதிக்கப்பட்டிருந்த வெடி வழிபாட்டிற்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலில் வெடி வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கு தபாலில் அரவணைப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மாதப்பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.
கொரோனா பிரச்சினை யால் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தினசரி பூஜைகள்
கடந்த 15ஆம் தேதி மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. தினசரி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்சபூஜைக்கு பின்பு 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை நடைபெற்றது. இதை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

கொரோனா சான்றிதழ்
இதனிடையே சபரிமலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 40 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர உடனடி முன்பதிவு மூலம் மேலும் 5 ஆயிரம் பக்தர்களும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வேண்டி வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா பிரச்சினையால் இந்த வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இந்த தடை விலக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலில் வெடி வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் வெடி வழிபாடு நேர்ச்சை நடத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி
கொரோனா பிரச்சினையால் பக்தர்கள் கோவில் சன்னிதானத்தில் இரவு நேரத்தில் தங்க கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையையும் விலக்கி கொள்ள கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது. மாலையில் மலையேறும் பக்தர்கள், இரவில் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் அறைகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாளில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.

பிரசாதம் விற்பனை
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் வழங்கப்படும் அப்பம், அரவணை பிரசாதங்களை வாங்கிச் செல்வார்கள். கோவிலுக்கு வராத பக்தர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 3 வகை கட்டணத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஒரு அரவணை மற்றும் அர்ச்சனை பிரசாதம் ரூ.450க்கும், 4 அரவணை, அர்ச்சனை பிரசாதம் ரூ.830க்கும், 10 டின் அரவணை அடங்கிய பாக்கெட் ரூ.1510க்கும் வழங்கப்படுகிறது.

11 நாட்களில் வருமானம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி டிசம்பர் மாதம் 26ஆம் தேதி மண்டல பூஜையும், அடுத்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி முதல் 11 நாட்களில் கோவிலுக்கு 1 லட்சத்து 19 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 நாட்களில் கோவிலுக்கு ரூ.10 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications