Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. அதிர்ஷ்டமும் ஆபத்தும் சேர்ந்து வருது கவனம்
Dhanusu Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Dhanusu Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மன நிம்மதி ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த மன சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எடுத்த காரியத்தில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும். இழுபறயாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். ஆரோக்கியத்தில் சளி தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகம் ரீதியாக எல்லா விஷயங்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும் நல்ல காலகட்டம்.
புதிய பொறுப்புகள்
தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, படிப்பு அபிவிருத்தி ஏற்படுத்தும். எல்லா விஷயங்களிலும் நன்மையும், சந்தோஷமும் ஏற்படும் காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். புதிய பொறுப்புகளுக்கு வரும் காலகட்டம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும்.
செல்வாக்கு கூடும்
செல்வாக்கும், சொல்வாக்கும் கூடக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். உறவினர்களைச் சந்திக்கக்கூடிய அனுகூலம் ஏற்படும். பெரிய நம்பிக்கை ஏற்படும். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும்.
லாபம் கொட்டும்
முயற்சி பல விதங்களில் லாபம், வெற்றியைத் தரும். அண்ணன், தம்பி, இளைய சகோதரன், சகோதரி மூலமாக வாழ்க்கையில் பெரிய சங்கடங்கள் ஏற்படும் சூழல் உள்ளதால் கவனம் தேவை. இந்த காலகட்டங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது. வண்டி, வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்வது நல்லது. தோள்பட்டை, கையில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
பெயர் கெடும் வாய்ப்பு, சுயநலவாதி என்கிற பெயர் உண்டாகும் வாய்ப்புண்டு. சண்டை, சச்சரவுகளை வீட்டுக்குள் கொண்டு வராமல் இருப்பது நல்லது. பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் கடன் தொல்லையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கழுத்து, கை பகுதியில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 85 சதவீதமும் நன்றாக இருக்கும். பள்ளி கொண்ட பெருமாளான விஷ்ணு வழிபாடு செய்வது, விஷ்ணு காயத்ரியை ஜெபிப்பது, முருகரை வழிபாடு செய்வதும் நன்மையை ஏற்படுத்தும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications