ஜிஎஸ்டி வரப்போகுது! தங்கம் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரிப்பு!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டின் மே மாதத்தில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. பொதுவாகப் பண்டிகை சீசனை முன்னிட்டு அதிகளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம்.

சீனாவைத் தொடர்ந்து தங்கம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிகம் சேமிப்பது வழக்கம். இல்லத்தரசிகள் நகைகளாக வாங்கி சேமிப்பார்கள். நகைகளுக்கான தேவையைக் கருத்தில்கொண்டு தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படவிருப்பதால் மே மாதத்திலேயே அதிகளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

கடந்த 2016ஆம் ஆண்டின் மே மாதத்தில் 1.47 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் மே மாதம் 4.95 பில்லியன் டாலர் மதிப்புக்குத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்றுமதி 8.32% உயர்ந்து, 2,400 கோடி டாலராக உள்ளது.

வெள்ளி இறக்குமதி

வெள்ளி இறக்குமதி

தங்கத்தைப் போலவே வெள்ளி இறக்குமதியும் அதிகரித்துள்ளது. அதாவது, 2016 மே மாதம் 39.54 மில்லியன் டாலர் மதிப்புக்கு வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017 மே மாதம் 442.9 மில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகப்பற்றாக்குறை

வர்த்தகப்பற்றாக்குறை

பெட்ரோலியம், எஞ்ஜீனியரிங், ஜவுளி, ஆபரண துறை சார்ந்த ஏற்றுமதி அதிகரித்ததே இதற்கு காரணம். இதுபோல் வர்த்தக பற்றாக்குறை 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 1,384 கோடி டாலராக உள்ளது.

3 மடங்கு உயர்வு

3 மடங்கு உயர்வு

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஏற்றுமதி 2,210 கோடி டாலராக இருந்தது. இறக்குமதியும் 33 சதவீதம் உயர்ந்து 3,785 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரித்ததே இதற்கு காரணம். தங்கம் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்து 4.95 பில்லியன் டாலராக உள்ளது.

ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு

ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு

இதனால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பரில் வர்த்தக பற்றாக்குறை 1,686 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - மே மாதங்களிலும் ஏற்றுமதி 13.83 சதவீதம் அதிகரித்து 4,807 கோடி டாலராக உள்ளது.

கடந்த நிதியாண்டு

கடந்த நிதியாண்டு

இறக்குமதியும் இந்த 2 மாதங்களில் 40.63 சதவீதம் அதிகரித்து 7,574 கோடி டாலராக உள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய 2016ஆம் ஆண்டின் மே மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 6.27 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2020ல் தங்கம் இறக்குமதி

2020ல் தங்கம் இறக்குமதி

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் 650 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நடப்பாண்டு 750 டன்னாக உயரும் என்றும் 2020 ஆம் ஆண்டு தங்கத்தின் இறக்குமதி 950 டன் ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Apprehension of higher goods and services tax (GST) rate and an increase in demand led to a surge in India’s gold imports by 236.7% to $5 billion in May.
Please Wait while comments are loading...