Kadagam: கடக ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்.. மார்ச் மாதத்தில் வரப்போகும் குட்நியூஸ்
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடகம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Kadagam]

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் மார்ச் மாத பலன்
கடக ராசிக்காரர்களுக்கு 8, 12 ஆம் இடத்தில் குருவின் தொடர்புள்ளது. ராஜயோகாதிபதியான செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருப்பதால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற துறைகளில் நல்லவைகள் நடக்கும். கடந்த ஆண்டுகளில் இருந்து வந்த மன அழுத்தங்கள் எதுவும் இந்த ஆண்டில் இருக்காது. எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வரக்கூடிய மாதமாக இருக்கும்.
மாற்றம்
அஷ்டமசனி உங்களுக்கு கடந்த வருடமே முடிந்திருந்தாலும் பெரிய அளவில் அந்த பாதிப்புகளில் இருந்து வெளிவரவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் இந்த மார்ச் மாதம் முதலே அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத மாற்றம், எதிர்பாராத நன்மைகள் தரக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும்.
புதிய வேலைகள்
வீடு சார்ந்த விஷயங்களில் சுபச்செலவுகள் ஏற்படும். வீடு வாங்குவதற்கான ஆரம்பம், அட்வான்ஸ் கொடுப்பது, வீட்டு போக்கியத்திற்குச் செல்வது போன்ற அமைப்பு உருவாகும். வேலை போனால் கூட கவலைப்படத் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் வேலையை விட நல்ல வேலைகள் கிடைக்கும். வேலை மாற்றம், தொழில் மாற்றம், தொழிலுக்கான இடமாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பாக்கியங்கள் கிடைக்கும்
வருமானக் குறைவுகள் ஏற்படாது. கெளரவம் அதிகரிக்கும். அப்பா வழி அமைப்புகளில் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தந்தை விஷயத்தில் நல்லவை நடக்கும். அவரிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும் பாக்கியம் உண்டாகும். அவருடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாக்கியங்கள் கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.
குழந்தை பாக்கியம்
பண வரவு நன்றாக இருக்கும். கெளரவம், புகழ் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும் காலகட்டம். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான நல்ல மருத்துவம், மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் நல்ல காலகட்டமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அமையும்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications