Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. கன்னி ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. என்ஜாய்
Kanni Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் உண்டாகும். ரத்தபந்த உறவுகள் மேன்மை அடையும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எதிரிகள் விஷயத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
குட்நியூஸ்
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். கடல் கடந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி, டிரேடிங் செய்வது, பிரான்செய்ஸ், விவசாயத் தோட்டம் வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். பலவிதமான நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் அற்புதம் காணப்படும். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நல்ல விஷயங்கள் வந்து சேரும்.
மிஸ் பண்ணிடாதீங்க
இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பெயர், புகழ் கிடைக்கும். திருமணத்தில் பாதிப்புகளைச் சந்தித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. சித்திரை முடிந்தவுடன், மே 14 ஆம் தேதியில் இருந்து ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
திருமணம்
இளம் வயதைச் சார்ந்த கன்னி ராசியினர் 7 இல் சனி வந்ததை எண்ணி கவலைப்படத் தேவையில்லை. இந்த காலகட்டத்தில் திருமணமாகும். பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
யோகம்
எல்லாவிதமான பயணங்களையும் மேற்கொள்ளலாம். அதில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும் நீங்கள் நன்றாக இருக்கும் யோகம் உண்டு. தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். பெரிய மனிதர்களைச் சந்திப்பது, மகான்களை தரிசிக்கும் யோகம் உண்டாகும். ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, சளி, அலர்ஜி, சுவாசக் கோளாறு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் சனி வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications