Rasi Palan This Week: மகர ராசிக்கு குருவின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்.. தொட்ட காரியங்கள் துலங்கும்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உறவுகளில் மேன்மை காணப்படும். குரு பகவானின் பார்வை இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அனுகூலம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சுப விரையம் செய்து மகிழ்வீர்கள்.
குரு பார்வை
வீட்டிலும், சமுதாயத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குருவின் 9 ஆம் பார்வை அடுத்த ஆண்டு வரை உங்களுக்கு கிடைக்கப் போகிறது. வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் இனிமையாகவும், கணிவுடனும் பேசுவது நன்மை பயக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட, கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
சிறிதாக மயக்கம் வந்தால் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உத்தியோக ரீதியாக இருந்த சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாகத் தீரும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் கொஞ்சம் பொறுமையுடன் எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டும். பெற்றோர், பெரியோருடன் மிகுந்த அன்பாக இருக்க வேண்டும். அவர்களிடம் வாக்கு வாதம் செய்வது, கோபப்படுவது, தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. துணையிடம் தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது.
கவனம் தேவை
பிள்ளைகளிடம் மிகுந்த ஆராய்ச்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். வேகமாக ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது போன்றவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் விஷயத்தில் நீண்டநாட்களாக இருந்து வந்த பாதிப்புகள், சவால்கள் அனைத்தும் நீங்கும்.
வழிபாடு
குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்க்க வேண்டும். அதேபோல, பிறர் குடும்ப விஷயங்களில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆடி மாதம் முழுவதும் பயணங்கள் சமயத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த உஷாராக இருப்பது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்வது மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications