வீட்டில் குவா குவா கேட்கலையா?... குரு, சுக்கிரன் நிலையை பாருங்க- பரிகாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சூரியன், புதன் சுக்கிரன் இடம் மாறும் கிரகங்கள்... உங்கள் ராசிக்கு என்ன பலன் ??- வீடியோ

  சென்னை: ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது.

  நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது.

  குழந்தை பாக்கியத்திற்கு பொன்னவன் எனப்படும் குரு பகவானின் நிலை, பார்வை மிகவும் அவசியமாகும். ஐந்தாம் இடத்தில் ராகு, செவ்வாய், சனி அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும்.

  புத்திரகாரகன்

  புத்திரகாரகன்

  குரு புத்திர காரகன் ஆவார். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

  பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

  ஜாதகத்தில் 5ஆம் வீடு

  ஜாதகத்தில் 5ஆம் வீடு

  5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது.
  பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும்.

  தடை ஏற்பட காரணம்

  தடை ஏற்பட காரணம்

  5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கருத்தறிக்கத் தடை ஏற்படும்.

  பெண் வாரிசு

  பெண் வாரிசு

  குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும் 5ம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடான வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். சுக்கிரன் சந்திரன் 5ஆம் இடத்தில் வலுவாக அமைந்தாலும் 5ஆம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

  தத்து புத்திர யோகம்

  தத்து புத்திர யோகம்

  5ம் இடம் புதனின் வீடான மிதுனம், கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில் சனி மாந்தி அமையப் பெற்று, புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நிலை ஏற்படும். ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம் கிடைக்கும்.

  கரு காக்கும் அன்னை

  கரு காக்கும் அன்னை

  குழந்தை வரம் வேண்டுவோர் சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபால பூஜை செய்வது சிறந்த பலனளிக்கும். திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் குழந்தை பாக்யதடையை நீக்கும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை சாப்பிட வேண்டும். கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  An analysis of husband and wife’s horoscope is essential before drawing any concrete conclusion. The 5th house indicates the childbirth and relationship with the children. In default, 5th house denotes the result of both the virtues and the sins that are carried from the previous birth and an inability to conceive is called as Putra Dosha.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற