For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் தோஷமுள்ள பெண்ணை திருமணம் செய்தால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா

: செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவு நுண் கிருமிகளும் இருக்கும். எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுடன் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்க்க வேண்டு

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் வீரியத்திற்குரிய கிரகம் என்பதால் ஆண், பெண் இருபாலருக்கும் அது சரியாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் தோஷம் என்று குறிப்பிடப்படுவது இந்த குறைபாட்டினைத்தான். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாகி சுபகிரகப் பார்வை இல்லாமல் இருந்தால் அவருக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு இருக்காது. ஆண் பெண் இருவருக்கும் சரியான விகிதத்தில் செவ்வாய் அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இன்பம் ஏற்படும். பெண்ணிற்கு வலுவாக செவ்வாய் இருக்கும் பட்சத்தில், ஆணிற்கும் வலுவாக செவ்வாய் இருக்க வேண்டும் என்று ஜோதிடவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் தோஷமுள்ளவர்களின் திருமணம் தடைபடுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ல் செவ்வாய் நின்றால் அது செவ்வாய் தோஷம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அப்படி பட்ட ஜாதகத்தை அதே தோஷமுள்ள சேர்க்கவேண்டும் என்பது சாஸ்திர விதி. இரண்டு தோஷமுள்ள ஜாதகங்கள் இணைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதாவது மைனஸ் மைனஸ் சேரும் போது எப்படி ப்ளஸ் ஆகிறதோ அப்படித்தான்.

செவ்வாய் ரத்தகாரகன், வீரியத்தை அதிகரிப்பவர். மனித உடலில் ரத்தத்தை குறிக்க கூடிய கிரகம். நமது ரத்தத்தில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதேபோல் நுண்கிருமி இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நமக்கு இருக்கும்போது நுண் கிருமிகளைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை. செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவு நுண் கிருமிகளும் இருக்கும். எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுடன் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.

செவ்வாய் எங்கு இருந்தால் தோஷம்

செவ்வாய் எங்கு இருந்தால் தோஷம்

ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம். இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது. பெரும்பா லான ஜாதகங்களில் அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல் 2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்கக் கூடாது.

செவ்வாய் தோஷம் விதி விலக்கு

செவ்வாய் தோஷம் விதி விலக்கு

செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் போது தாம்பத்ய வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சில விதிவிலக்குகளும் உண்டு. செவ்வாயை குரு பார்த்தாலும் தோஷம் இல்லை. மகரம் நீர் ராசி செவ்வாய் இந்த ராசியில் உச்சமைடைகிறார். இந்த ராசியில், லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிறது. மேஷம்,விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் இல்லை, காரணம் ராசி,லக்னாதிபதியாக வரும் கிரகம் அந்த ஜாதகருக்கு நன்மைதான் செய்வார் என்பதால் தோஷம் இல்லை. மேலும் சூரியன்-சந்திரன் இரண்டும்,செவ்வாய் இருக்கும் இடத்தை பார்த்தால் தோஷம் இல்லை காரணம் சூரியனும் சந்திரனும் செவ்வாய் பகவானுக்கு அம்மை அப்பனாக கருதப்படுகின்றனர்.

தோஷ ஜாதகம்

தோஷ ஜாதகம்

ரத்தத்தில் ஆர்.எச் பேக்டர் என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு திருமண தடைபடும் என்று ஜோதிடர்கள் கூறுவதுண்டு.

முருகன் கோவிலில் பரிகாரம்

முருகன் கோவிலில் பரிகாரம்

உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நுண் கிருமிகளை குறைக்கவும் முருகன் கோவிலுக்கு போக சொல்கிறார்கள். செவ்வாயின் அதிபதி முருகன், செவ்வாய்கிழமைகளில் துவரம் பருப்பை கொண்டு முருகனை வணங்கினால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அங்காரகனுக்கு அபிஷேகம்

அங்காரகனுக்கு அபிஷேகம்

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

தோஷம் நீக்கும் வைத்தியநாத சுவாமி

தோஷம் நீக்கும் வைத்தியநாத சுவாமி

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய தடைகள் நீங்கும்.

English summary
Here is the detailed information about Chevvai Dosham and pariharam to follow for this Dosha to overome.Check the 5th and 7th house of the person who does not have chevvai dosham. Make sure the person who does not have chevvai dosham will not have any makara or bhadaka maha dasa. Check the 5th and 7th house of the person who has chevvai dosham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X