• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த ராசிக்கு சண்டே ரொமான்ஸ் அதிகம்.... சந்திராஷ்டமம் யாருக்கு?

|

சென்னை: இன்றைய தினம் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள் பார்க்கலாம்.எந்த ராசிக்கு ரொமான்ஸ், பணம் வரும் வாய்ப்பு அதிகம் என பார்க்கலாம்.

இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், கடகத்தில் புதன் உடன் ராகு, சிம்மத்தில் சுக்கிரன், துலாமில் குரு, தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் செவ்வாய் உடன் கேது மேஷம் ராசியில் சந்திரன் என கிரகங்களில் சஞ்சாரம் அமைந்துள்ளது.

கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் வாயை திறந்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

மேஷம்

மேஷம்

ராசிக்குள் சந்திரன் நின்றிருப்பதால் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு நன்றாக இருக்கும் என்றாலும், செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். ராசியான நிறம் வெள்ளை, பிரவுன் ராசியான எண்கள் 2, 6.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் இன்று பணம் வந்தாலும் செலவுகளும் சரியாக இருக்கும். இன்று வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். சிலருக்கு கவுரவமான வேலை கிடைக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ரொமான்ஸ் செய்ய இன்று ஏற்ற நாள் இல்லை, சுமாரான நாள்தான். ராசியான நிறம் ஆரஞ்சு, வெளிர் பச்சை ராசியான எண்கள் 1, 5.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச் செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3,9.

கடகம்

கடகம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தொழில் செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் கொஞ்சம் டென்சனை ஏற்படுத்தலாம். நிலைமையை சமாளிக்க அமைதியாக இருங்கள். இன்று வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் கூடுதல் கவனம் அவசியம். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். காதல் விவகாரங்கள் கைகூடும், பணம் வரும் வாய்ப்பும் அதிகம். ராசியான நிறம் வெள்ளை, சிவப்பு ராசியான எண்கள் 6, 9.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை காட்டவும். உங்கள் காதல் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 5,8

கன்னி

கன்னி

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் கவனமாக இருக்கவும். சந்திராஷ்டமம் இருப்பதால் வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை என்றாலும் ஆலோசனையுடன் தொழில் தொடங்குவது அவசியம். பணம் வரும் வாய்ப்பு குறைவுதான். உடல் நலம் சீராக இருக்கும். இன்று ராசியான நிறம் நீலம், சிவப்பு, ராசியான எண் 1, 7.

துலாம்

துலாம்

ராசிக்கு 7வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்து உள்ளார். வேலை செய்யும் இடங்களில் கவனமாக இருக்கவும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் ஏற்படும். மேலதிகாரிகளின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் காதல் துணை உங்களை உருகி உருகி நேசிப்பார். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு. ராசியான எண் 4, 6.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்து உள்ள சந்திரனால் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும் கவனமாக இருக்கவும்.இன்று இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது. வீட்டில் கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழியில் லாபம் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண் 2, 9.

தனுசு

தனுசு

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். பொருட்களை கடனாகக் கொடுக்க வேண்டாம். இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையால் எரிச்சல் வரும். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. ராசியான நிறம் நீலம், மஞ்சள், ராசியான எண் 1, 5.

மகரம்

மகரம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டவும். வீடு, வண்டி வாகன பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இன்று சரியான நாள். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண் 4, 6.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் முயற்சிகள் வெற்றி பெரும். அந்தரங்க உணர்வுகள் ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. வாழ்க்கைத்துணைக்கு உடல் நலக்கோளாறு ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு, ராசியான எண் 2,4.

மீனம்

மீனம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகம். இன்று வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 2, 9.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Daily Horoscope July 8th 2018 From Mesham to Meenam

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more