அரசு வேலை... காக்கிச்சட்டை போடும் யோகம் தரும் செவ்வாய் பகவான் - இந்த பரிகாரம் பண்ணுங்க
அரசு பணி கிடைப்பதற்கும் நவகிரகங்களின் அருள் இருக்க வேண்டும். இங்கு எந்தெந்த ராசியினருக்கு அரசு பணி கிடைக்கும் என்பதையும், எல்லா ராசியினருக்கும் அரசு பணி கிடைப்பதற்கான பரிகாரங்களை குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சென்னை: "கழுதை மேய்த்தாலும் கவர்மென்டில் மேய்க்கனும்"ஆசையிருக்கு தாசில்தாராக. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க" இப்படி அரசாங்க வேலையையும் அதன் மதிப்பையும் கூறும் பழமொழிகள் ஏராளம் உண்டு. பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும்போதுகூட பல பெற்றோர்கள் எப்படியாவது ஒரு அரசாங்க வேலை செய்பவரை தங்கள் மகளுக்கு மணமுடித்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள்.
அதற்குக் காரணம், மாதம் பிறந்தால் சுளையாக சம்பளம் வந்து விடும். பாதுகாப்பான வாழ்க்கை, நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை, சமூகத்திலும் கௌரவம், இப்படி பல லாபங்கள் இருப்பதால்தான் அரசு வேலையைப் பலரும் விரும்புகிறார்கள். இந்த கொரோனா காலத்தில் பலருக்கும் வேலையிழப்பு, சம்பள குறைப்பு ஏற்பட்ட போதும் அரசு வேலை செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற காரணமும் அரசு வேலையை பலரும் விரும்புகின்றனர்.
அரசு தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசாங்க அதிகாரியாக முடியுமா என்று பலரும் ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்துள்ளனர். அரசு பணி கிடைப்பதற்கும் நவகிரகங்களின் அருள் இருக்க வேண்டும். இங்கு எந்தெந்த ராசியினருக்கு அரசு பணி கிடைக்கும் என்பதையும், எல்லா ராசியினருக்கு அரசு பணி கிடைப்பதற்கான பரிகாரங்களை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

சூரியன் சனி
ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். ஒருவர் பிறவி ஜாதகத்தில் அரசு வேலைக்கு வகை செய்யும் அமைப்புகளான தசம ஸ்தானம் ஆதித்யன், அங்காரகன், கர்மகாரன் தசம ஸ்தானாதிபதி போன்றோர் நல்ல நிலைமையில், பார்வையில், கூட்டணியில், மறைவில் இடம் பெறாது இருந்தால், திறமையும் தகுதியும் இருந்தால், நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும்.

காவல்துறை அதிகாரி
செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.

பாம்பு கிரகங்கள்
கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் ராகு நிற்பதும் கூட அரசு வேலையை ஏற்படுத்தித் தரும். சந்திரன் சனி சேர்க்கையால் அரசியல் உயர்பதவிகள் சந்திரன் சனி ஆட்சி பெறாவிட்டாலும் மகர/கடக ராகு கேதுக்கள் அரசியலில் உயர்வையும் புகழையும் தந்துவிடுவார்கள். இதேவிதிப்படி அரசியல் உச்சத்தையும் ஜன வசியத்தையும் தரும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை துலா ராகு மேஷ கேது செய்து விடுவார்கள். இதே விதிப்படி செவ்வாய்/சுக்ரன் சேர்க்கையாலும் சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

அரசாங்க பணி
எல்லா ராசியினருக்கும் அவர்களின் ஜாதகத்தில் இருக்கின்ற கிரகங்களின் நிலை பொறுத்து அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், சூரியன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட ராசியான மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு மற்ற எல்லா ராசியினரை விட அரசாங்க பணி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் கருத்தாகும்.

யோகமான ராசிக்காரர்கள்
ஜோதிட சூட்சும விதிகளின் படி சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் அரசு கிரகங்களாகும். இந்த கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் கொண்ட மேஷம் , சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசியினருக்கு அரசு கிரகங்களின் அருள் முழுமையாக இருப்பதால், இவர்கள் அரசாங்கத்தில் ஊழியர்களாகவும், அதிகாரிகளாகவும் பணிபுரியும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

முயற்சிக்கு வெற்றி
இந்த ராசியினருக்கு இயற்கையிலேயே நிர்வாக மேலாண்மை, சரியான திட்டமிடல் போன்ற திறன்கள் அதிகம் இருப்பதை காண முடிகிறது. இதனால் மற்ற ராசியினர் அரசாங்க உத்தியோகங்கங்கள் பெற முடியாது என்று அர்த்தமில்லை. இறைவனின் மீது நம்பிக்கை வைத்து அரசு பணிகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்கும். எல்லா ராசியினரும் அரசு பணி, பதவி உயர்வு பெற கீழே பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமன ஈடுபாட்டுடன் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும்.

அரசு வேலைக்கு பரிகாரங்கள்
தினமும் காலையில் எழுந்து குளித்து, சூரிய பகவானை நமஸ்கரித்து அவருக்குரிய மந்திரங்களை 10 முறை துதிக்க வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அரசு கிடைக்கும் யோகம் ஏற்படும். செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். இதனால் அரசு பணி வேண்டுபவர்களுக்கும், ஏற்கனவே அரசு பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளும் கிடைக்கும் யோகம் உண்டாகும். சனி கிழமைகளில் சனி பகவானுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வந்தாலும் அரசு உத்தியோகம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications