For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம் - ஆவணி மாத முக்கிய பண்டிகைகள்

Google Oneindia Tamil News

மதுரை: ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்துள்ளது. இந்த ஆவணி மாதத்தில் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. ஆவணி மாதத்தின் சிறப்புகளையும் கொண்டாப்படும் முக்கிய பண்டிகைகளையும் பார்க்கலாம்.

மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான்.

Krishna Jayanthi,Vinayagar Chathurthi - Avani month important days

மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்.

காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது. மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி.

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி மாத முக்கிய விஷேச நாட்கள்:

ஆவணி 2ஆம் தேதி ஆகஸ்ட் 19 மகா சங்கடஹர சதுர்த்தி. இன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சங்கடங்கள் நீங்கும்

ஆவணி 6 ஆகஸ்ட் 23 கிருத்திகை கோகுலாஷ்டமி. காலை முதல் விரதம் இருந்து மாலையில் கிருஷ்ணருக்கு பிடித்தமான பலகாரங்களை வைத்து வழிபடலாம்.

ஆவணி 7 ஆகஸ்ட் 24 சனி ஜெயந்தி. நவ கிரகங்களில் சனி பகவானை வழிபடலாம். கறுப்பு வஸ்திரம் கருங்குவளை மலர் சாற்றி 8 எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

ஆவணி 13 ஆவணி அமாவாசை

ஆவணி 14 ஆகஸ்ட் 31 செவ்வாய் ஜெயந்தி. நவகிரகங்களில் செவ்வாய் பகவானை வழிபட உகந்த நாள். பூமி, வீடு மனை பிரச்சினைகள் தீரும்.

ஆவணி 16 செப்டம்பர் 2 விநாயகர் சதுர்த்தி இன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடலாம். தீராத வினைகள் தீரும்.

ஆவணி 17 செப்டம்பர் 3 ரிஷி பஞ்சமி விரதம்

ஆவணி 24 செப்டம்பர் 10 குரு ஜெயந்தி நவகிரகங்களில் குருபகவானை வழிபட உகந்த நாள்

ஆவணி 25 செப்டம்பர் 11 திருவோணம் பண்டிகை வாமன ஜெயந்தி, ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை வழிபட கல்வி அறிவு அதிகரிக்கும்.

English summary
Here is the list of important days for the Tamil Month of Aavani from August 18 to September 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X