For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழு தலைமுறை சந்ததிகளை காக்கும் குல தெய்வ வழிபாடு

பல வீடுகளில் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் ஏகப்பட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருப்பார்கள

Google Oneindia Tamil News

மதுரை: குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும்.

குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும்.

உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைத்துக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. பூஜை அறையில் உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

மார்ச் 29ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!மார்ச் 29ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

பூஜை அறையில் விளக்கு

பூஜை அறையில் விளக்கு

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும். வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும்படி வைத்துக்கொள்ளுங்கள். கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும். நீங்கள் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது.

குல தெய்வத்தின் சக்தி

குல தெய்வத்தின் சக்தி

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது.

 குல தெய்வ வழிபாடு முக்கியம்

குல தெய்வ வழிபாடு முக்கியம்

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

சந்தோஷமான வாழ்க்கை

சந்தோஷமான வாழ்க்கை


நாம் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும். ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம்.

அனுகிரகம் அவசியம்

அனுகிரகம் அவசியம்

குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுகிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுகிரகமும் இல்லை என்றும், குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம்.

பிரச்சினைகளை சமாளிக்கலாம்

பிரச்சினைகளை சமாளிக்கலாம்

பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குகிறார்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குகிறார்கள். பின்பு, திருமணம் முடிந்தவுடன் கணவரின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. ஆனால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை வழிபாடு செய்து வந்தால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

குல தெய்வத்தின் சக்தி

குல தெய்வத்தின் சக்தி

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்துவிட முடியாது. நவகிரகங்களும் துணை நிற்கும். குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம். ஆனால், அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.

குல தெய்வ அருள் வேண்டும்

குல தெய்வ அருள் வேண்டும்

இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் தெய்வ வழிபாடு செய்தாலும் பலன் இருப்பதில்லை. குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

சந்ததியினரின் சந்தோஷம்

சந்ததியினரின் சந்தோஷம்

உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள். நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம். குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையைவாழ்வார்கள்

அஸ்ட்ரோ.வெ.பழனியப்பன்

கோபிசெட்டிபாளையம்

English summary
Kula Deivam blessings encompass seven generations. People visit the temple of their Kula Deivam every year and make special pujas from their family. Without Kula Deivam's blessing nothing can be done.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X