For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றைக்கு சந்திர கிரகணத்தை மிஸ் பண்ணிட்டா 2029 வரைக்கும் காத்திருக்கணுமாம்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்றைக்கு நிகழ்கிறது. புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகங்களும் ஒன்றாக அணிவகுத்து நிற்கிறதாம்.

Google Oneindia Tamil News

சென்னை: வானத்தில் புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகங்களும் ஒன்றாக அணிவகுத்து வருகிற தருணத்தில் முழுச் சந்திர கிரகணம் இன்றைக்கு நிகழ உள்ளது. இன்றைய சந்திரகிரகணத்தை பார்க்காமல் தவற விட்டால் இதே போல நீண்ட சந்திரகிரகணம் பார்க்க 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.

சந்திர கிரகணம் இன்று இரவு விண்ணில் தென்பட உள்ளது. இந்தச் சந்திர கிரகணம் நடப்பு நூற்றாண்டில் மிக நீண்ட நேரம் நீடிக்கும் சந்திரகிரகணமாகும்.

இந்த கிரகணத்தின்போது நிலவின் வெளிச்சம் குன்றிச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதைப் பொதுமக்கள் பார்வையிடச் சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று இரவு 10 மணிமுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


வானத்தில் வேடிக்கை

வானத்தில் வேடிக்கை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று ஏற்பட உள்ள இந்த கிரகணம்,

இந்திய நேரப்படி இன்று இரவு 11.54 மணிக்குச் சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும்.

நூற்றாண்டின் அதிசயம்

நூற்றாண்டின் அதிசயம்

தொடர்ந்து பகுதி சந்திர கிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். முழுச் சந்திர கிரகணம் மொத்தம் 143 நிமிடங்கள் நிகழ உள்ளது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும்.

வெறும் கண்களால் பார்க்கலாம்

வெறும் கண்களால் பார்க்கலாம்

கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திரகிரகணம் என்றும், ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும், அவ்வாறு பார்ப்பதால், பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிரகங்கள் அணிவகுப்பு

5 கிரகங்கள் அணிவகுப்பு

புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகங்களும் ஒன்றாக அணிவகுத்து வருகிற தருணத்தில் முழுச் சந்திர கிரகணம் நிகழ்வதும் இன்றைய கிரகணத்தின் சிறப்பாகும். அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25ஆம் தேதி நிகழும் என்று தெரிவிக்கப்

English summary
Chandra Grahan or Lunar Eclipse on Friday, the moon will appear red in color, also called Blood Moon. If you missed the trilogy of supermoons earlier this year, the Lunar eclipse -- the longest of the 21st century set to occur on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X