• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகரசங்கராந்தி 2019 பிரவேசம்- எந்த நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பலன்

|

சென்னை: மகரசங்கராந்தி என்னும் கால தேவதை இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்கழி மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை ஜனவரி 14,2019 வளர்பிறை அஷ்டமி திதி அஸ்வினி நட்சத்திரம் சித்த யோகம், பவகரணம் இரவு 7 மணி 51 நிமிடத்தில் கடக லக்னத்தில் பிரவேசிக்கிறார். மகரசங்கராந்தி தேவதையின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.

தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

Makar Sankranti 2019: Know why this time Makar Sankranti

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.

இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

அஸ்வினி நட்சத்திரம் அஷ்டமி திதி

இந்த ஆண்டு மார்கழி மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை ஜனவரி 14,2019 வளர்பிறை அஷ்டமி திதி அஸ்வினி நட்சத்திரம் சித்த யோகம், பவகரணம் இரவு 7 மணி 51 நிமிடத்தில் கடக லக்னத்தில் த்வாந்த என்ற பெயருடன் சந்தன ஸ்நானம் செய்து, வெண்மை நிற ஆடை அணிந்து கஸ்தூரி பூசிக்கொண்டு மாணிக்க ஆபரணம் அணிந்து, புன்னை மலர் மாலைச் சூடி தேங்காய் அன்னம் பொற்கிண்ணத்திலிட்டு சாப்பிட்டு, வீணையை கையில் ஏந்தி, வெண்கொற்றக்குடை பிடித்து, சிம்மவாசனத்தில் அமர்ந்து, புன்னகையோடு உட்கார்ந்த நிலையில் கிழக்கு திசை நோக்கி மகர சங்கராந்தி புருஷன் வருகிறார்.

பலன்கள் எப்படி

• நல்ல மழையுண்டு, செழிப்பு உண்டாகும். பொதுமக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பர். மருத்துவமனைகள் பெருகும்.

• அரசியல் பிரமுகர்களுக்குக் கெடுதி ஏற்படும்.

• தேங்காய் விலை கூடும், தீ விபத்துக்கள் அதிகரிக்கும்

• அரசியல்வாதிகளுக்கு பெரும் பயம் உண்டாகும். ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

• கிழக்கு திசையில் உள்ள நாடுகள் பாதிக்கப்படும். பிரபலமான பெண் ஒருவரின் இழப்பு ஏற்படும்.

• தானியங்கள் உற்பத்தி பெருகும் என்று விளம்பி வருடத்திய திருமலை திருப்பதி தேவாஸ்தான பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசு கண்காணிப்பு

இந்த ஆண்டு மகர சங்கராந்தி புருஷர் அசுவினி நட்சத்திரத்தில் வருவதால் வங்கிகளில் தன நாசம் ஏற்படும். லாக்கரில் உள்ள முக்கிய பொருட்கள் யாவும் அரசின் கண்காணிப்பில் வரும். யாரும் அரசாங்கத்தை இனி ஏமாற்ற முடியாமல் தவிப்பார்கள் என்று ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

27 நட்சத்திரகாரர்களுக்குப் பலன்கள்:

ரேவதி, அசுவினி, பரணி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் உண்டாகும். ஆயில்யம், மகம், பூரம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும் ஏற்படும்.

ராஜ வெகுமானம்

உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும்,கேட்டை, மூலம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ கோபமும், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் மகர சங்கராந்தி பலன்களாக ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Makara Sankranti commemorates the beginning of the harvest season and cessation of the northeast monsoon in South India.Auspicious time for Makar Sankranti or Sankranthi activities which is known as Punya Kaal in year 2019

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more