Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குனி உத்திர திருவிழா முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் இன்று திருக்கல்யாணம்

பங்குனி உத்திரத்திருவிழா தமிழகம் முழுவதும் சைவ வைணவ ஆலயங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. பழனியில் இன்று திருக்கல்யாணமும் நாளைய தினம் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளைய தினம் திருத்தேரோட்ட வைபம் நடைபெறுவதைக் கண்டு தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்து கொண்டு பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருஆவினன் குடி எனப் போற்றப்படும் பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானவை தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா.

இதில் பங்குனி உத்திரத் திருவிழாவில் தேரோட்ட வைபவத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தீர்த்தக்காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை சுமந்துகொண்டு பாதயாத்திரையாக பழனிக்கு வருவதுண்டு.

தீர்த்தக்காவடி

தீர்த்தக்காவடி

கோடை காலத்தின் தொடக்க விழாவாக வரும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தக்காவடி எடுத்து வரும் முருக பக்தர்கள் முருகப் பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடி காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபடுவது மரபு. கடந்த இரண்டு ஆண்டகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தர்களின் பங்களிப்பு இல்லாமல் பங்குனி உத்திர விழா களையிழந்து காணப்பட்டது.

விழாக்கோலம் பூண்ட கோவில்கள்

விழாக்கோலம் பூண்ட கோவில்கள்

தற்போது கொரோனா தொற்று குறைந்துவிட்டதால், அனைத்து கோயில்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதே போல், பழனியிலும் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் முருகனுக்கு உச்சிக்கால பூஜையில் 16 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தங்கமயில் வாகனம்

தங்கமயில் வாகனம்

பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியதில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் கிரிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நான்காம் நாளான செவ்வாய்கிழமை தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியுலா எழுந்தருளினர். இதை முன்னிட்டு, மலையடிவாரம் நெய்க்காரப்பட்டி மஹாலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு தங்க மயில் வாகனத்தில் ஏற்றம் கண்டு சந்நிதி வீதி மற்றும் கிரிவல வீதிகளைச் சுற்றி ஊர்வலம் நடைபெற்றது.

 திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண வைபவம்

திருஆவினன்குடி கோயில் அருகிலுள்ள சௌமிய நாராயண கவரநாயக்கர் மண்டபத்தில் வள்ளி நாயகி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமையன்று முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்ட வைபவம் நடைபெற உள்ளது. தேரோட்ட வைபவத்தைக் கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் காவடி சுமந்து சென்று முருகப் பெருமானை வழிபடுவதுண்டு.

 பக்தர்கள் பாதையாத்திரை

பக்தர்கள் பாதையாத்திரை

அதன்படி, தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயில் காவடிகளைச் சுமந்து கொண்டு ஈரோடு வழியாக பாதயாத்திரை வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வரும் வழியிலுள்ள சென்னி மலை, சிவன்மலை, ஊதியூர் என முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மலைக்கோயில்களுக்கும் சென்று வழிபட்டுச் செல்வதுண்டு.

திருச்செந்தூரில் கோலாகலம்

திருச்செந்தூரில் கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு திகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடந்து அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 3.20 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

வள்ளி திருக்கல்யாணம்

வள்ளி திருக்கல்யாணம்

பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி வழக்கமாக இரவு 7 மணிக்கு நடைபெறும் ராக்கால அபிஷேகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+