திருமலை திருப்பதியில் நாளை ரத சப்தமி விழா - ஏகாந்தமாக நடைபெறும் மினி பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா நாளை 8ஆம் தேதி நடக்கிறது.
திருப்பதி: திருமலை திருப்பதியில் ரத சப்தமி விழா நாளை ஏகாந்தமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா நாளை 8ஆம் தேதி நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. மினி பிரம்மோற்சவம் என்று ரத சப்தமி விழா அழைக்கப்படுகிறது.
பொதுவாக பிரம்மோற்சவ நாட்களில் தினசரியும் காலை மாலைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி
ரத சப்தமி நாளில் ஒரே நாளில் 7 வாகன சேவையை தரிசனம் செய்யலாம். 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும், மலையப்பசாமி தனித்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். வாகன சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருட வாகன சேவை
முதல் வாகனச் சேவையாக இன்று காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகனச் சேவை நடைபெறும்.

கல்ப விருட்ச வாகன சேவை
மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவை, மதியம் 2 மணியில் மாலை 3 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும் தொட்டியில் சக்கர ஸ்தானம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகன சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனச் சேவை நடைபெறுகிறது.

ரத சப்தமி விழா
ரத சப்தமி விழாவையொட்டி நாளைய தினம் வழக்கமாக கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாக்கள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெற்ற நிலையில் ரத சப்தமி விழாவும் ஏகாந்தமாக நடைபெற உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications