பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி தரும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: பள்ளி தேர்வில் மாணவர்களின் வெற்றிக்காக 24 மற்றும் 25 தேதிகளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீ வித்யா லக்ஷ்மி, ஸ்ரீ மேதா சூக்தம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். தேர்வில் வெற்றி பெற முயற்சி அவசியம். தெய்வத்தின் துணையும் வேண்டும். கல்விதான் அனைத்துக்கும் பிரதானம். மனிதனைப் பக்குவப்படுத்துவது கல்வி. அது இல்லை என்றால், அனைத்திலும் தோல்விதான் கிடைக்கும்.

சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும்.
மறைந்த புதன் நிறைந்த செல்வம் என்று சொல்வார்கள். கல்விக்கு அதிபதி புதன் முக்கியம், அதற்கு அடுத்து லக்னம், லக்னாதிபதி பலம் முக்கியம். உயர்நிலைக் கல்விவரை நான்காம் இடம், சிந்தனை, யோகத்தை தரக்கூடிய ஐந்தாம் இடம், மேல்படிப்பு, ஆராய்ச்சித்துறை ஒன்பதாம் இடம், பேச்சு, வாக்கு செயல்திறனைக் குறிக்கும் இரண்டாம் இடம் என பல பிரிவுகள் உள்ளன. சுருக்கமாக 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும்.

ஏலக்காய் ஹோமம்

ஏலக்காய் ஹோமம்

தெய்வத் திருவுருவங்களுக்கு பூமாலை, சந்தன மாலை அணிவிப்பது போல் ஏலக்காய் மாலையும் விசேஷம். புரதச் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை ஏலக்காயில் அடங்கி உள்ளன. வாதம், பித்தம், கபம் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியான இந்த ஏலக்காயைக் கொண்டு ஹோமம் நடைபெற உள்ளது. மாணவர்களின் கல்வி அறிவு மேம்பட ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

ஸ்ரீவித்யா, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி போன்ற தெய்வங்கள் கல்வியோடு தொடர்புடையவை. ஆகவே, இந்த தெய்வங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இந்த ஹோமங்களில் ஜாதி மதம், ஏழை பணக்காரர், கற்றவர் கல்லாதவர் என்கிற பேதம் இன்றி பெற்றோர் மற்றும் குரு ஆசியுடன் அனைவரும் கலந்து கொண்டு பலன் பெற வேண்டும்.

மாணவர்களுக்கு ஹோமம்

மாணவர்களுக்கு ஹோமம்

இன்றைய மாணவர்கள் துர் சகவாசத்தாலும், போதிய வழிகாட்டுதல் இல்லாததாலும், தவறான பாதையின் பக்கம் திரும்புகிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பள்ளிக்கூடங்களின் தரமும் உயர வேண்டும்... மாணவர்கள் - ஆசிரியர் ஒற்றுமை ஓங்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே இருக்கின்ற உறவு முறை ஓங்க வேண்டும் என்பதால் தேர்வுகள் துவங்க உள்ள இந்த நேரத்தில் இத்தகைய ஹோமம் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது.

ஆசிரியர்களும் மாணவர்களும்

ஆசிரியர்களும் மாணவர்களும்

இயற்கை அறிவியல்படி பூமியில் விளையக் கூடிய ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அதன்படி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான மூலிகைப் பொருட்களைக் கொண்டு இந்த பீடத்தில் நடக்கின்ற ஒவ்வொரு ஹோமமுமே விசேஷமானது. இதையே ஒரு அழைப்பிதழாகக் கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், சக ஊழியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த பிரமாண்டமான ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.

ஹோமங்களின் நன்மை

ஹோமங்களின் நன்மை

1000 சண்டி யாகம், 365 நாள் 365 யாகம், 10 லட்சம் ஏலக்காய் ஹோமம், 1,32,000 கொழுக்கட்டை ஹோமம், 1,10,000 லட்டு ஹோமம், 15 ஆயிரம் வாழைப்பழ ஹோமம், 10 ஆயிரம் மாதுளம்பழ ஹோமம், ஒரு லட்சம் நெல்லிக்கனி ஹோமம், 2014 பூசணிக்காய் ஹோமம், 6 ஆயிரம் கிலோ மிளகாய் ஹோமம், 11 ஆயிரம் வில்வப் பழம் ஹோமம் போன்ற பல்வேறு விதமான ஹோமங்கள் நடைபெற்றுள்ளது. இந்த வரிசையில் வருகிற 24ஆம் தேதி சனிக் கிழமை அன்று துவங்கி 25ஆம் தேதி ஞாயிற்று கிழமை வரை நடக்க இருக்கிற ஏலக்காய் ஹோமம் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் உயர அதி முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்

24 மற்றும் 25 தேதிகளில் காலை 10 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரை டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ மேதா சூக்த ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன.

ஏலாக்காய் ஹோமம்

ஏலாக்காய் ஹோமம்

கல்வித் தடையினால் ஏற்படக்கூடிய நோய்களும், தேவையற்ற பழக்கவழக்கத்தினால் ஏற்படும் நோய்களும், மன அழுத்தங்களால் ஏற்படும் நோய்களும் நீங்குவதற்காகவும் மக்கள் நோயின்றி ஆரோக்யமாக வாழ இந்த ஹோமம் நடைபெற உள்ளது. வருகின்ற 10, 11, 12 பொது தேர்வில் மாணவ மாணவியர்கள் கல்வியில் மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது. ஏலக்காய் தவிர ஹோமத்தில் தேன், நெய், தாமரை மற்றும் பல விதமான புஷ்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மாணவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள்

மாணவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள்

வாசனைப் பொருட்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் ஏலக்காய் இந்த ஹோமத்தில் சேர்க்கப்படும்போது இந்த சூழலே தெய்வீக மணம் நிறைந்து காணப்படும். தெய்வத் திருவுருவங்களுக்கு பூமாலை, சந்தன மாலை அணிவிப்பது போல் ஏலக்காய் மாலையும் விசேஷம். இந்த ஏலக்காயைக் கொண்டு நடத்தப்படும் ஹோமத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை. 9443330203.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dr. Sri Muralidhara Swamigal and in regard to the forthcoming examinations special arrangements have been made for Saraswathi, Vidya and Hayagrivar homam at Danvantri Peedam, Walajapet for the benefit of school and college going students and also for the welfare of Gurus and their families.Good knowledge, wisdom, intelligence, etc. This homam is scheduled to happen at Danvantri Peedam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற