கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையா? தவறாமல் இந்த பரிகாரங்களை பண்ணுங்க
கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் என்று இலங்கை வேந்தனை சொல்வார்கள். கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்களுக்கு எளிய பரிகாரங்கள் உள்ளன.
சென்னை: ருணம், ரோகம், சத்ரு இந்த மூன்றுமே மனிதர்களை மெல்லக்கொல்லும். அதிலும் கடன் பிரச்சினை கவலையை ஏற்படுத்தி மனிதர்களை கலங்க வைத்து கொல்லும். கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்களுக்கு எளிய பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் இடம் கடன் ஸ்தானத்தை குறிக்கும் கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். சக்கரத்தாழ்வார் அருள் இருந்தால் கண்டிப்பாக கடன் பிரச்சினை நீங்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று சனி மற்றும் புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும்.
சக்கரத்தாழ்வாரை ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும், கடன் தீர்வதற்கு மனமுருக நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் செய்தாலே கடன் பிரச்சினை தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.

மேஷம், விருச்சிகம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தயிரை கொண்டு இனிப்பு சேர்த்து பலகாலம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்கும் பலருக்கும் கொடுத்து வர கடன் பிரச்சினை தீரும். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள்
ஞாயிறன்று லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகத்தை பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ரிஷபம், துலாம்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம். துலாம் ராசிக்காரர்கள் பசும்பாலை சுக்ரஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக கடன் தீரும் வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும். 11 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் தீரும்

மிதுனம் கன்னி
மிதுனம் ராசிக்காரர்கள் தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும் - கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும். கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

கடகம், சிம்மம்
கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். கடன்கள் வெல்லம் போல கரைந்து விடும். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

மகரம், கும்பம்
மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும். கும்ப ராசிக்காரர்கள் வியாழன் மாலை 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றவருக்கும் தானமாய் பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் மளமளவென அடைபடும்.

தனுசு, மீனம்
தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய் கிழமைகளில் ஆலயப்பணிகளுக்கு செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம். மீனம் ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமையன்று மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நல்லது. செவ்வாய் பகவானை மனதார நினைத்துக்கொள்வது நலம்.

கடன் தீர்க்கும் எளிய பரிகாரம்
பவுர்ணமி நாளில் குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபடுவது சிறப்பு. குல தெய்வ படம் இல்லாதவர்களும் குல தெய்வம் தெரியாதவர்களும் ஐந்து முக குத்துவிளக்கை பூஜை அறையில் ஏற்றி வைத்து படையல் போட்டு கற்பூர ஆரத்தி காட்டி கடன் பிரச்சினை நீங்க மனதார வேண்டிக்கொள்ளலாம். ஒன்பது பவுர்ணமிகள் விடாமல் இந்த பரிகாரம் செய்ய கடன் தொல்லைகள் எளிதாக தீர்ந்து விடும். கடன் தீருவதற்கான வழியும் கிடைக்கும். இந்த பரிகாரத்தை அனைத்து ராசிக்காரர்களும் செய்யலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications