உதயநிதி எதிர்காலத்தில் திமுக தலைமைக்கு வருவாரா?...முதல்வர் ஆவாரா?...ஜாதக யோகங்கள் சொல்வதென்ன

திமுகவின் வருங்காலமே... அடுத்த தலைமையே என்று உதயநிதிக்கு ஆதரவாக குரல்கள் எழத்தொடங்கிவிட்டன. உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் உள்ள யோகம் எப்படி இருக்கும் என்றும் இந்த அமைப்பு தலைவராகும் தகுதியை பெற்றுத்தருமா? என ஜோதிடர்கள் கணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாத்தா, அப்பா வழியில் சினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்தாலும் தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி. திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே திமுகவின் வருங்காலமே... அடுத்த தலைமையே என்று உதயநிதிக்கு ஆதரவாக குரல்கள் எழத்தொடங்கிவிட்டன. திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருந்தாலும் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உதயநிதியை வைத்து போற்றத் தொடங்கிவிட்டனர். அறிவாலயத்தில் மட்டுமல்ல சட்டசபையிலும் அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. அரசாள ஆசை இருந்தாலும் அதிர்ஷ்டமும் யோகமும் வேண்டும் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த யோகம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்த உதயநிதி, தானே ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். சில திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நமக்கு சினிமா மட்டுமே போதும் அரசியல் தேவையில்லை நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று 2018 ஆம் ஆண்டு வரைக்கு கூறி வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

2019ஆம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதுமே பயணம் செய்தார். கலகலப்பான பேச்சு, நையாண்டியாக செய்த விமர்சனம் பலரையும் கவர்ந்தது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதையும் தாண்டி சினிமா நடிகர் என்பதற்காகவும் உதயநிதியைப் பார்க்க கூட்டம் கூடியது. லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்களும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களும் பெற்ற வெற்றி உதயநிதியை அரசியல் பக்கம் தானாக கொண்டு வந்து சேர்த்தது. திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியும் தேடி வந்தது.

வாக்காளர்களிடம் வரவேற்பு

வாக்காளர்களிடம் வரவேற்பு

2020 ஆம் நடைபெற்ற நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா வசனம் பேசி அவ்வப்போது வடிவேல் வசனம் எல்லாம் கூறி வாக்கு சேகரித்தார் உதயநிதி. பாஜக கூட்டணி வேட்பாளர்களை கிண்டல் செய்தார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு செங்கலை வைத்து இதுதாங்க மத்திய அரசு சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனை என்று சாதாரண உரையாடலாக மக்களிடையே அவர் செய்த பிரச்சாரம் திமுகவினர் இடையே மட்டுமல்லாது பெருவாரியான வாக்காளர்களிடையேயும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்திய அளவிலும் அது வைரலானது.

 உதயநிதியின் உழைப்பு

உதயநிதியின் உழைப்பு

சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டாலும் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார் உதயநிதி. பெரும்பான்மையான இடங்களை பெற்று திமுக ஆட்சியமைத்துள்ளது. தனது தந்தையை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் நம்பர் 2 என்ற இடம் இப்போதே கிடைக்க ஆரம்பித்து விட்டது. எம்எல்ஏ உதயநிதியின் கட்டளைக்கு கீழ்படிய பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 புகழ் பாடும் எம்எல்ஏக்கள்

புகழ் பாடும் எம்எல்ஏக்கள்

சட்டசபையில் முதல்வருக்கு வணக்கம் வைத்தவர்களை விட உதயநிதியை ஸ்பெஷலாக கவனித்து வணக்கம் வைத்தவர்கள்தான் அதிகம். என்னை புகழக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட உங்களைத்தானே உதயநிதியை அல்லவே என உதயநிதியை புகழ ஆரம்பித்தனர் அனைவரும். அடுத்த 50 வருடங்களுக்கு தமிழகத்தை காக்க உள்ள திராவிடத் தலைவர் உதயநிதி என்று அமைச்சர் மா.சுப்ரமணியின் சட்டசபையில் பேசியிருந்தார். இதே போல் அமைச்சர் எ.வ.வேலுவும் கூட சட்டசபையில் தனது உரையின் போது உதயநிதியை புகழ்ந்து பேசியிருந்தார். இவர்கள் மட்டும் அல்ல அனைத்து அமைச்சர்களும் சட்டசபையில் பேசும் போது தவறியும் கூட உதயநிதி பற்றி பேசாமல் இருந்தது இல்லை. மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் சரி ஜூனியர் எம்எல்ஏக்களாக இருந்தாலும் சரி உதயநிதி புகழ் பாடினார்கள்.

தேடி வரப்போகும் பதவி

தேடி வரப்போகும் பதவி

எம்எல்ஏவாக மட்டுமே இருக்கும் உதயநிதி விரைவில் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி மிகப்பெரிய பொறுப்பை ஏற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான முன்னோட்டமாகவே இப்போது பலரும் உதயநிதியை புகழத் தொடங்கியுள்ளனர். நாளை திமுகவில் முக்கிய பொறுப்பில் வரும் நிலையில் உள்ள உதயநிதியின் அபிமானத்தை பெறுவதில் யார் முந்துவது எனப்போட்டியே நடக்கிறது. இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா, மற்றக்கட்சியில் இது இல்லையா? என இதற்கு பலரும் பதிலடி கொடுப்பதும் நடக்கிறது. இனி உதயநிதிக்கு ஜாதக பலன் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

தொண்டர்கள் பலம்

தொண்டர்கள் பலம்

அரசியல்வாதிகளுக்கு பேச்சுத்திறமை அவசியம். அந்த பேச்சுத்திறமைதான் தொண்டர்களை வசப்படுத்தும். புதன் கிரகம் பேச்சிற்கு காரகர். ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் வலுவாக இருக்க வேண்டும். இந்த மூன்றுமே உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் ராஜகிரகங்களின் ஆதரவு இருந்தால் அரசாளும் யோகம் வரும் என்பார்கள். தாத்தா வழியில் அப்பாவின் வழியில் அரசியல் பயணம் செய்யும் உதயநிதியின் ஜாதகத்தில் கிரகங்கள் யோகம் பெற்று உள்ளதால்தான் அரசியலில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே வெற்றிக்கனியை ருசிக்க முடிந்திருக்கிறது.

அதிர்ஷ்ட ஜாதகம்

அதிர்ஷ்ட ஜாதகம்

ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு மேஷம் லக்னம், சந்திரன் உச்சம் பெற்றுள்ளார். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு ராசிகளில் கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன இதுவே கிரகமாலிகா யோகம். இந்த யோகம் அரிதான் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

தலைவனுக்கு உரிய தகுதி

தலைவனுக்கு உரிய தகுதி

ஒருவரிடம் மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம் சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும். ராஜ கிரகங்களில் சூரியன் ஆளுமைத்திறனுக்கும், செவ்வாய் மனிதநேயத்திற்கும், குருவும் சந்திரனும் மக்கள் செல்வாக்கிற்கும் புதன் ராஜ தந்திரத்திற்கும் சனி தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுத்தரும்.

எதிரிகள் தொல்லை உண்டா?

எதிரிகள் தொல்லை உண்டா?

திமுக ஆதரவுக் குடும்பங்களைச் சேர்ந்த பாட்டிகள் கூட உதயநிதியை தங்கள் வீட்டுப் பேரனாக நினைக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் விதை போட்டவர் தாத்தா கருணாநிதி என்றாலும், திமுக என்ற விருட்சத்தில் கிடைக்கும் பழம், இப்போது உதயநிதிக்குத் தான் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. மு.க ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தது. அதையும் தாண்டி அந்த எதிர்ப்புகளை முறியடித்துதான் தலைவராகவும் முதல்வராகவும் அமர்ந்துள்ளார். ஆனால் உதயநிதிக்கு அந்த அளவிற்கு பெரிதாக எதிர்ப்புகள் எதுவும் உருவாக வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குருவும் சனியும் கூட்டணி

குருவும் சனியும் கூட்டணி

குரு பெயர்ச்சியாகி மகரம் ராசியில் அமர்ந்துள்ளார். ரிஷபம் ராசிக்கு 9ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தில் குரு அமர்ந்து உள்ளது. சனிபகவானும் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். குரு பார்வை ரிஷபம் ராசிக்கு கிடைக்கிறது. குரு பெயர்ச்சி முடிந்த பின்னரே தனது பிரச்சார பயணத்தை தொடங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். இன்று இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தில் திமுக கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

எதிர்காலம் எப்படி

எதிர்காலம் எப்படி

உதயநிதியின் ஜாதகத்தை பல வருடங்களுக்கு முன்பு பார்த்த பிரபல ஜோதிடர் ஒருவர் இவருக்கு வளமான பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும் இவர் அதிர்ஷ்டகரமானவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அப்பாவை விட புகழ்பெறுவார். தாத்தாவைப் போல சிறந்த வெற்றி பெறுவார் என்றும் கூறியிருக்கிறார். அதன்படியே இப்போது நடந்து வருகிறது எனலாம்.

கை கொடுக்கும் யோகங்கள்

கை கொடுக்கும் யோகங்கள்

நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருப்பதைப் போல, சொந்தக்கட்சியினர் ஆதரவு இருப்பது போல மக்கள் ஆதரவும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். உதயநிதியின் ஜாதகத்தில் உள்ள யோகத்திற்கு வருங்காலத்தில் திமுகவின் தலைமைப் பொறுப்பு ஏற்பதோடு 'உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்... என்று முதல்வராக பதவியேற்றாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் திமுகவினர். ஜோதிடர்களின் கணிப்பு பலிக்குமா விரைவில் காலம் பதில் சொல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+