புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதம் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்
மகாலட்சுமியைப் பிரிந்த திருமால் கௌதம முனிவரின் ஆலோசனையை ஏற்று உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் திருமகளை அடைந்தார் என்று புராணம் கூறுகிறது.
சென்னை: சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரும் விரதம் இருக்கிறது. உமா மகேஸ்வர விரதம். புரட்டாசி பவுர்ணமி தினத்தில் உமா மகேஸ்வர விரதம் இருந்து சிவ பார்வதியை வணங்க தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்பவைதான் அவை. இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைபிடித்தால் மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று காஞ்சி மஹா பெரியவர் கூறியுள்ளார்.

மகாலட்சுமியைப் பிரிந்த திருமால் கௌதம முனிவரின் ஆலோசனையை ஏற்று உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் திருமகளை அடைந்தார் என்பது புராணம் கூறுகிறது. இன்றும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விரதமாகவே இது இருந்து வருகிறது.
ஒரு முறை கயிலாயம் சென்ற துர்வாச முனிவருக்கு, சிவபெருமானின் கழுத்தில் கிடந்த வில்வ மாலை கிடைத்தது. அதனை வழியில் சந்தித்த இந்திரனுக்கு அளித்தார், துர்வாசர். ஆனால் இந்திரன் அந்த மாலையை அலட்சியப்படுத்தியதால், அவனுக்கு சாபம் அளித்து விட்டு, அதே கோபத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது கருடன் மீது வருகை தந்த மகாவிஷ்ணு வைச் சந்தித்தார். மகாவிஷ்ணு, மகாலட்சுமியை சந்திப்பதற்காக விரைந்து வைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.
மகாவிஷ்ணுவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்த துர்வாசர், சிவபெருமானின் வில்வ மாலையை விஷ்ணுவிடம் கொடுத்தார். மகாலட்சுமியை சந்திக்கும் ஆவலில் இருந்த விஷ்ணு, அந்த மாலையை வாங்கி கருடனின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தான் அளித்த ஈசனின் மாலையை, கழுத்தில் அணி யாது, கருடனின் மீது வைத்த விஷ்ணுவின் மேல், துர்வாசருக்கு கோபம் வந்தது.
தன்னையும், ஈசனையும் விஷ்ணு அலட்சியப்படுத்திவிட்டதாக நினைத்த துர்வாசர், "மகாலட்சுமி வைகுண்டத்தில் இருக்க மாட்டார். அவர் பாற்கடலுக்குள் சென்று விடுவார். பின் ஒரு சமயம், பாற்கடல் கடையப்படும்போது அவர் வெளிப்படுவார் என்று சபித்துவிட்டார்.
இந்த நிலையில் வைகுண்டத்தில் மகாலட்சுமி இல்லாததால், ஈரேழு உலகங்களுக்கும் சென்று பார்த்தார், மகாவிஷ்ணு. எங்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. மகாலட்சுமி இல்லாததால், அனைத்து உலகங்களும் லட்சுமி கடாட்சம் இழந்து வறுமையில் வாடின.
இதற்கான காரணம், துர்வாசரின் கோபம் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார். எனவே அவர் கௌதம முனிவரின் ஆலோசனைப்படி, உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பயனாக பின்னாளில், அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதற்குள் இருந்து மகாலட்சுமி வெளிப்பட்டாள். உமாமகேஸ்வர விரதத்திற்கு அப்படியொரு மகிமை இருக்கிறது.
விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து சோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள்.
பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். எனவே அதிதிகளுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் கொடுப்பது அவசியம்.
புரட்டாசி பவுர்ணமி விரதம்
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும்.
புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமம் உண்டு.
பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும். இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். ஒளி பொருந்திய முகமும் நல்ல தேஜசும் பின்னர் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications