Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?
March month rasi palan: சந்திர கிரகணம், சனிப்பெயர்ச்சி என மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள், பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் மார்ச் மாத பலன்
மகர ராசிக்காரர்களுக்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். எந்த விஷயங்களில் எல்லாம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அந்த விஷயங்களில் இருந்தெல்லாம் லாபம் வரக்கூடிய காலகட்மடாக இருக்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக மாறக்கூடிய அமைப்பு உள்ளது. தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
நல்ல திருப்பத்தைத் தரும் மாதமாக மார்ச் மாதம் அமையும். பணம் வரக்கூடிய வழிகளை அடையாளம் காணக்கூடிய சிறப்பு மாதமாக இருக்கும். எந்த இடத்தில் பணம் இருக்கும். எந்த இடத்தில் நன்மையை ஏற்படும் என்பதை தெளிவாகக் கண்டறியக்கூடிய மாதம். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும்.
கும்பம் மார்ச் மாத பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் துறையில் சாதிக்க முடியாமல் இருந்த கும்ப ராசியினருக்கு வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அமைப்புகளில் நீங்கள் நினைத்தது போன்றே நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவிக்கு இடமாற்றம், கணவருக்கு இடமாற்றம் என சில மாற்றங்கள் உண்டாகும்.
வேலைக்காக வெளிநாடு செல்வது, ஒரு மாதத்திற்கு வெளியில் செல்வது போன்ற நிலை ஏற்படும். தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். காதல் தோல்வி ஏற்பட்டிருந்த இளைய பருவத்தினருக்கு புதிய காதல் உண்டாகும். திருமணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் இருந்தவர்களுக்கு தெளிவான முடிவை எடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கும்ப ராசியினர் செட்டிலாகக்கூடிய யோகம் உண்டாகும். இளைஞர்கள் கூடுதல் நன்மை பெறக்கூடிய காலகட்டம்.
மீனம் மார்ச் மாத பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு நல்லவைகள் நடக்கும். 30 வயதுக்குள் உடையவர்கள் கடுமையான குழப்பத்தில் இருப்பீர்கள். 20 வயதுக்குள் இருப்பவர்கள் படிப்பு சரியாக இல்லை, வேலை சரியாக இல்லை, காதல் போன்ற அமைப்புகளில் மன அழுத்தங்கள் கண்டிப்பாக இருக்கும்.தன்னைச் சுற்றி ஏதோவொன்று நெகட்டிவாக நடக்கிறது என்பது போன்ற தோற்றம் ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுபோன்ற எந்தவொரு நிலைமைகளும் ஏற்படாது. உங்களுக்கு சில சுப கடன்கள் மட்டுமே ஏற்படும்.
சொத்து சேர்க்கை, சொந்த வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காதல் என்கிற பெயரில் உங்கள் மனம் சிறிது திசை திரும்பும் சூழல் உண்டு. சில விஷயங்களில் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. பணம், வேலை சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். கடனை அடைக்கக்கூடிய அளவுக்கு வருமானம் வரும். ஐந்து மடங்கு லாபங்கள் கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications