நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகுமா? ஏழரை சனி காலத்தில் எதையும் செய்யாதீங்க!
சென்னை: கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடுபவர்களுக்கும் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து பணத்தை முதலீடு செய்தாலோ, தசாபுத்தி வேலை செய்தாலோ அவர் கோடீஸ்வரர் ஆக முடியும். சனி பகவான் அள்ளியும் கொடுப்பார். குப்புற தள்ளியும் விடுவார் எனவே யாருக்கு எந்த நேரத்தில் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று பார்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், பெரிய அளவில் முன்னேற்றத்தை எளிதில் அடைவார்கள். அதே நேரத்தில் ஏழரை சனி நடக்கும் போதும் அஷ்டமத்து சனி, கண்டச்சனி காலங்களில் அகலக்கால் வைப்பது அதிக தொழில் முதலீடு செய்வது ஆபத்தில் முடியும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

விபரீத ராஜ யோகம்
'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். ஜோதிடப்படி 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

குரு கேது கூட்டணி
ஒருவரின் ஜாதகத்தில் குரு, கேது இணைவும், கேதுவுக்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும்.
குருவிற்கு கேந்திர ஸ்தானத்தில் அதாவது 1, 4, 7, 10 திரிகோண ஸ்தானத்தில் 1, 5, 9 கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். குரு, கேது கெடாமலும், குரு, கேது கேந்திர திரிகோணங்களில் இணைந்து நின்றாலும் தன் புத்தி, உழைப்பால் கோடீஸ்வரராகிவிடுவர். 6, 8, 12ல் குரு இருந்து, கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது யோக பலனைக் குறைக்கவே செய்யும்.

தொழிலால் கோடீஸ்வரர்
10ஆம் அதிபதி, 11ம் அதிபதி பலம் பெற்று சுபகிரக பார்வை பெற்றாலும், 10, 11ம் அதிபதி இணைந்து 4, 9 இடங்களில் இருந்தாலும், 4, 9ம் அதிபதியின் பார்வை பெற்றாலும் தொழில் வருவாய் மூலம் கார், பங்களா என்று சுகமாக வாழ்வர். 10, 11ம் அதிபதிகள் பாதிக்கப்படாமல் இருந்து தசை நடைபெற்றால் தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும்.

மனைவியால் கோடீஸ்வர யோகம்
சுய ஜாதகத்தில் 2, 7, 9ம் அதிபதிகள் இணைந்து 4, 11ம் வீடுகளில் நின்றால் வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்வர். ஜாதகத்தில் 11, 9ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும் கோடீஸ்வரர் ஆவார். சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும்.

உழைப்பால் கோடீஸ்வர யோகம்
சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.

நஷ்டத்தை தவிர்க்க என்ன வழி
ஒரு சிலர் எதைத் தொட்டாலும் பொன்னாகும்.. ஒரு சிலர் தொட்டதெல்லாம் நஷ்டமாகும்.கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நலம். குரு வருடந்தோறும் மாறுவதால், பொதுவாக குருபலம் இருக்கிறது என்று புதிய தொழில் தொடங்கிவிடக்கூடாது. கோசார பலனை மட்டும் பார்க்காமல் 3, 6, 8, 12ம் அதிபதி தசை, பாதகாதிபதி தசை, மாரகாதிபதி தசைகளைத் தவிர்த்தும், நடக்கும் தசையின் நிலையை ஜாதகத்தில் முறையாகத் தெரிந்துகொண்டும் தொழில் தொடங்கினால் தோல்விகளைத் தவிர்க்கலாம்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications