For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2020 ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது - எந்த நாட்டில் பார்க்கலாம்

இந்த ஆண்டின் கடைசி மற்றும் முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி 14ஆம் தேதி இரவு 7.03 மணி முதல் இரவு 23 நிமிடம் வரை நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

Google Oneindia Tamil News

சென்னை: 2020ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் திங்கட்கிழமை அமாவாசை நாளில் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்திய நேரப்படி 14ஆம் தேதி இரவு 07.03 மணிக்கு தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு 22 நிமிடம் வரை கிரகணம் நீடிக்கிறது.

அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜூன் 21ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது.

Solar Eclipse 2020: The last Full solar eclipse is not visible in India

பொதுவாக சூரிய கிரகணம் பகலிலும் சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். நம்முடைய நாட்டின் நேரப்படி இந்த கடைசி சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. அதே நேரத்தில் சிலி, அர்ஜென்டைனா நாடுகளில் பகல் நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் அவர்களால் பகலில் பார்க்க முடியும்.

முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்கா நேரப்படி டிசம்பர் 14ஆம் தேதி பகல் 1 மணி 33 நிமிடம் 55 நொடிக்கு தொடங்குகிறது. இது இந்திய நேரத்திற்கு இரவு 07 மணி 03 நிமிடம் 55 நொடியாகும்.

படிப்படியாக கிரகணம் நீடித்து முழு சூரிய கிரகணத்தை தென் அமெரிக்க நாடுகளில் பகல் 02 மணி 32 நிமிடம் 34 நொடியில் பார்க்கலாம். இது இந்திய நேரப்படி இரவு 08 மணி 02 நிமிடம் 34 நொடியாகும்.

சோமவார அமாவாசை நாளில் அரசமரத்தை வலம் வந்தால் வேண்டிய வரம் கிடைக்கும்சோமவார அமாவாசை நாளில் அரசமரத்தை வலம் வந்தால் வேண்டிய வரம் கிடைக்கும்

இந்த முழு சூரிய கிரகணம் மாலை 4 மணி 13 நிமிடம் 28 நொடி வரை நீடிக்கிறது. இந்திய நேரப்படி அது இரவு 09 மணி 43 நிமிடம் 28 நொடியாகும். கிரகணம் அப்போது முழு உச்சத்தில் இருக்கும்.

முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவில் மாலை 05 மணி 54 நிமிடம் 18 நொடிக்கு முடிவடைகிறது. இது இந்திய நேரப்படி இரவு 11 மணி 24 நிமிடம் 18 நொடியாகும். கிட்டத்தட்ட நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக சூரிய கிரகணம் நீடிக்கிறது. படிப்படியாக கிரகணம் தென் அமெரிக்காவில் 06 மணி 53 நிமிடம் 03 நொடியில் முடிகிறது. இந்திய நேரப்படி டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு 23 நிமிடமாகும்.

கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்

வானில் தெரியும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணத்தை அர்ஜென்டைனா, சிலி நாடுகளில் முழுமையாக பார்க்கலாம். அதே நேரத்தில் தெற்கு தென் அமெரிக்கா, தென்மேற்கு ஆப்பிரிக்கா, அண்டார்டிகாவில் இந்த சூரிய கிரகணத்தை பகுதி நேர கிரகணமாக பார்க்க முடியும்.

இந்த சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பு செய்வதை இந்தியாவில் இருப்பவர்கள் பார்த்து ரசிக்கலாம்.

English summary
The last and total solar eclipse of this year will take place on the 14th from 7.03 pm to December 15th 23 am Indian time. This solar eclipse is not visible in India. December 14 whereas the full eclipse will begin at 20:02 IST. The solar eclipse will peak at 21:43 and end at 00:23 IST on December 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X