Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கப் போகும் மாற்றம்.. கோபத்தை விட்டுடுங்க
Thulam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பெரிய கடன் கிடைக்கும். நல்ல வருமானம் உண்டாகும். வீட்டை இடித்து கட்டுவது, புனரமைப்பது போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படும் மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
பணவரவு
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதற்காகவும், யாருக்காவும் விட்டுத் தரக்கூடிய சூழல் ஏற்படாது. எதிர்பாரத பெயர், புகழ் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் ஏற்படும்.
அனுகூலம்
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கக் கூடிய முடிவுகள் பலரால் பாரட்டப்படும். முருகர் வழிபாடு பல விதத்தில் நன்மையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். இழுபறியாக இருக்கும் நிலைகள் படிப்படியாக மாறும்.
வழிபாடு
தொலைதூரத்தில் இருந்து நன்மைகள் ஏற்படும் காலகட்டம். ஆரோக்கியத்தில் முதுகு, கழிவுப் பாதையில் சிறு பாதிப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டுக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சந்தோம் 75 சதவீதமும், பொருளாதரத்தில் 95 சதவீதமும் நன்மைகள் ஏற்படும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications