உகாதி: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன திருப்பதி தேவஸ்தானம்

மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளி பக்தர்களும் இனி சிறப்பு தரிசன முறையில் கூட்ட நெரிசலில் சிக்காமல் கண் குளிர சாமி தரிசனம் செய்யலாம்.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஏழுமலைகள் மீது அருள்பாலிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்கவும், திருச்சானூரில் அருள்பாலிக்கும் பத்மாவதி தாயாரைப் கண்குளிர தரிசனம் செய்யவும் தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்த ஆன்லைன் முன்பதிவு தரிசனம் மூலம் தற்போது தினசரியும் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 மூத்த குடிமக்கள் தரிசனம்

மூத்த குடிமக்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்,ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சிறப்பு நுழைவு தரிசனம்

சிறப்பு நுழைவு தரிசனம்

தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

தரிசன நேரம் எப்போது

தரிசன நேரம் எப்போது

தினந்தோறும் ஆயிரம் பக்தர்கள் என இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

உகாதி பண்டிகை ஆழ்வார் திருமஞ்சனம்

உகாதி பண்டிகை ஆழ்வார் திருமஞ்சனம்

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.

தூய்மைப்பணிகள்

தூய்மைப்பணிகள்

அதன்படி தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையொட்டி காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மை படுத்தப்பட்டது.

பக்தர்கள் அனுமதி

பக்தர்கள் அனுமதி

பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது போர்த்தப்பட்டுள்ள பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+